அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டிலுள்ள கொரோனா நோயாளிகளுக்காக 'கோவிட் ஹோம் கேர்' திட்டம் இன்று தொடக்கம்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Amma Covid Home Care, CoronaVirus, tn cm EPS, Tamil nadu CM, அம்மா கோவிட் ஹோம்கேர், கொரோனா, நோயாளிகள், தமிழகம், முதல்வர்

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க, குறைந்த பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உடைய நோயாளிகள், 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது உடல்நிலையை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.


latest tamil news


இவ்வாறு வீட்டு கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில், 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள், மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும். அதில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதய துடிப்பை கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் போன்ற உபகரணங்கள் இருக்கும்.

அத்துடன், 14 நாட்களுக்கு தேவையான விட்டமின் - சி, டி; ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி ஆகியவை இருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அதிமதுர பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 முக கவசங்கள், சோப்பு உள்ளிட்டவையும் வழங்கப்படும். இதைதவிர, முழு உடல் பரிசோதனை மைய அலுவலர்கள், வீடியோ அழைப்பு வாயிலாக உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளனர். அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டத்தை முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
14-ஆக-202016:48:32 IST Report Abuse
S. Narayanan ithai munbe seithirukkalaam. pala uyirgalai kaappaatriyirukkalaam.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-ஆக-202016:06:17 IST Report Abuse
Thiagarajan Kodandaraman முகக்கவசம் அணிய மறுத்து ஏராளமானோர் திரிந்து கொண்டிருக்கிறார்கள் ..மதுரையில் மிக அதிகம் .கடுமையான தணடனை அளிக்காவிடில் தொற்று குறைவே குறையாது ஒரு பயம் இருக்கவேண்டும் சட்டத்தை மதிக்கவேண்டும் கண்டிப்பாக ஆட்சியர் நடவடிக்கை தேவை
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஆக-202014:32:46 IST Report Abuse
தமிழ்வேல் நல்லது. தொடர்ந்து போட்டுக் கொள்ளப்படும் இந்த முகக்கவசம் குறைந்தது 4 மணிநேரங்களுக்கு ஒரு முறை "கட்டாயமாக" மாற்றப் பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X