அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுகவில் யார் தலையீடு: ரகசியம் வெளியீடு!

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
கு.க.செல்வம், செல்வம், திமுக, உதயநிதி, உதயநிதிஸ்டாலின், தி.மு.க., ஜனநாயகம், ஆயிரம் விளக்கு

சென்னை: உதயநிதியின் தலையீடுதான் பிரச்னைக்கு காரணம் என தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட செயலர் பதவியை எதிர்பார்த்த, கு.க.செல்வத்திற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, உதயநிதியின் ஆதரவாளர் சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த செல்வம், சமீபத்தில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சிக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, தி.மு.க., வில் இருந்து செல்வம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு, செல்வம் பதில் அளித்திருந்தார். 'தி.மு.க.,வை விட்டு, மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவர்' என, நேற்று முன்தினம், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கு.க.செல்வத்தை நேற்று நிரந்தரமாக நீக்கி, ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த கு.க.செல்வம் கூறியதாவது: தெளிவான விளக்கம் அளித்தும் நேரில் சந்திக்க துணிவு இல்லாமல் நீக்கப்பட்டேன். என்னை நீக்கியது நியாயமில்லை. ஜனநாயக படுகொலை.

சட்டசபையில், பா.ஜ.,விற்கு ஆதரவாக செயல்படுவது குறித்து முடிவு செய்யவில்லை. கட்சி சார்பற்று செயல்படுவேன்.

தற்போது எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு 2 முறை திமுக தோல்வியடைந்துள்ளது.என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை. எந்த கட்சி வாய்ப்பு தருகிறதோ, அந்த கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்.


latest tamil newsஉதயநிதியின் தலையீடுதான் நான் கட்சியிலிருந்து விலக்கப்படுவதற்கு காரணம். தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் சிலர் வெளியே வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
17-ஆக-202005:35:54 IST Report Abuse
NicoleThomson இங்கே கருத்து எழுதியவர்கள் யாரும் படித்த இளைஞர்களான கருநாடக சிங்கம் அண்ணாமலை, சாமி போன்றோர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுத மாட்டேங்குறாங்க என்பது தான் வேதனை
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
15-ஆக-202018:25:51 IST Report Abuse
Amal Anandan இவனை எப்படி திமுகவில் சேர்த்தங்கனே புரியவில்லை இப்போ பிஜேபியிலா, வெட்கக்கேடு.
Rate this:
15-ஆக-202022:34:32 IST Report Abuse
krishna Tasmac matta murasoli moolai Anandan nee manushana irukka adha vida kevalam podhum illai....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202005:20:15 IST Report Abuse
meenakshisundaramஇப்போ எந்த கட்சி யிலும் சேரலைன்னு சொல்லும் போதே இப்படி ஒரு கமெண்ட்?-கொஞ்சமாவது யோசிச்சு சொல்லணுமய்யா கருத்து -உதய நிதி ,தயா நிதி .காலா நிதி,கருணா நிதி -இப்படி அடுக்கிகிட்டே போகலாம் .மேலும் 'தாயாலு அம்மாள் 'இது திருப்பதி தேவியின் ஒரு பெயர். தமிழனை முட்டாளாக்கிய தெலுங்கு குடும்பம் ?...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-ஆக-202011:01:41 IST Report Abuse
Malick Raja கு க செல்வம்ம்னு ஒரு MLA.இருப்பது இப்போதாவது வெளிவந்ததே .. மகிழ்ச்சி . கு க செல்வம் ஆயிரம்விளக்கு தொகுதியில் MLA. ஆணவருன்னு இப்போதுதான் அறிமுகம் ஆகி இருக்கிறார் .. வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X