நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷன் குற்றவாளி

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
prashant bhushan, contempt of court, supreme court, நீதிமன்றஅவமதிப்பு, பிரசாந்த் பூஷன், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்,

புதுடில்லி; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதித்துறையையும் விமர்சித்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்ற வாளி என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விபரம், வரும், 20ல் அறிவிக்கப்படவுள்ளது. டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுஇருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.வழக்கு விசாரணையின்போது, நீதித்துறை நடவடிக்கையை விமர்சிக்கவில்லை என, தெரிவித்த பிரசாந்த் பூஷன், அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தான், அந்த கருத்தை பதிவிட்டதாக தெரிவித்தார்.


latest tamil newsஇந்நிலையில், நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள், தண்டனை குறித்த வாதம், வரும், 20ல் துவங்கும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது சிறை தண்டனை,அபராதம் என, இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanan -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202019:11:12 IST Report Abuse
Ramanan super jugment if common citizen is following court order and respect the same the lawyers and politicians are taking advantage in future this will be stopped and good for our country
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-ஆக-202019:09:02 IST Report Abuse
vbs manian பயிரை கொஞ்சம் அதிகமாகவே மேய்ந்து விட்டது.
Rate this:
Cancel
ramanan -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202019:04:00 IST Report Abuse
ramanan அருமையான தீர்ப்பு சாமானியன் நீதி மன்ற தீர்ப்பை மதிகும் பொழுது சட்டம் படித்த மேதாவிகள் கருத்து தெரிவிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X