பலாப்பழத்தை விரும்பி சாப்பிட்ட பிரணாப்; நினைவுக்கூர்ந்த மகன்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிகிச்சைக்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பலாப்பழத்தை விரும்பி சாப்பிட்டதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார்.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, 10ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த
Pranab, Jackfruit, Village, pranab Son, பிரணாப், மகன், பலாப்பழம்,

புதுடில்லி: கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிகிச்சைக்கு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பலாப்பழத்தை விரும்பி சாப்பிட்டதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, 10ம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும், அவரது மூளையில், ரத்தக்கட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை முடித்து, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் 'பிரணாப் உடல்நிலை சீராக இருந்தாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள அவர், கோமா நிலையில் உள்ளார்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.


latest tamil news


இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், பிரணாப் முகர்ஜியின் மகனும் காங்., முன்னாள் எம்.பி.,யுமான அபிஜித் முகர்ஜியிடம் தொடர்புக்கொண்டு பிரணாப் குறித்து கேட்டுள்ளது.

அதில் அவர் கூறியதாவது: எனது தந்தைக்காக மேற்கு வங்கத்தில் உள்ள எங்களது கிராமமான மிராட்டிக்குச் சென்று பலாப்பழங்களை வாங்கச் சென்றேன். கிட்டத்தட்ட 25 கிலோவிற்கு பலாப்பழங்களை வாங்கினேன். அதனை கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி ரயில் மூலமாக கொண்டு வந்து அப்பாவைச் சந்தித்தேன். அப்பா அதனை மிகவும் விரும்பி சாப்பிட்டார். நல்ல வேளையாக அதனால் அவரின் சர்க்கரையின் அளவு அதிகரிக்கவில்லை.


latest tamil news


ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதித்த போது, அவருக்கு மூளையில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் முன்னர், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அவர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். என்னால் அவரை நான்கு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. கடைசியாக சந்தித்த போது, அவரது மூச்சு விடும் திறன் நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202016:45:19 IST Report Abuse
Raman We wish u a speedy recovery Sir.
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
14-ஆக-202013:40:04 IST Report Abuse
Balasubramanian நம்மூரில் மழைகாலத்தில் யாரும் பலாப்பழம் விற்கவோ, வாங்கி திங்கவோ மாட்டார்கள் பாவம், மகன் அப்பாவிற்கு பிடிக்கும் என்று வாங்கி வந்து இருக்கிறார் விரைவில் மாஜி பிரஸிடெண்ஜி பிரணாப் பிழைத்துவர பிரார்த்திப்போம்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
14-ஆக-202015:29:04 IST Report Abuse
Anbuமேற்கு வங்கத்தில் வேரில் பழுத்த பழம் (அதிகம் இனிப்புச் சுவையானதாகக் கருதப்படுகிறது) கிடைக்கும் ...........
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-ஆக-202013:12:05 IST Report Abuse
 Muruga Velதமிழ்நாட்டிலும் வேர் பலா உண்டு ...உங்க முகமும் பழுத்து இருக்கே .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஆக-202013:10:17 IST Report Abuse
Lion Drsekar நல்ல மகன், உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார், பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X