பயணி தவறவிட்ட ரூ.1.4 லட்சத்தை திருப்பி கொடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (9) | |
Advertisement
ஐதரபாத்: ஆட்டோவுக்கான தினசரி வாடகையைக் கூட கட்ட முடியாமல் தவிக்கும் ஓட்டுநர் ஒருவர், தன் ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.1.4 லட்சத்தை நேர்மையாக அவரிடமே ஒப்படைத்துள்ளார். ஐதராபாத்தில் ஹசன் நகரைச் சேர்ந்தவர் முகமது ஹபீப். வாடகைக்கு எடுத்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் பயணித்த பெண் ஒருவர், தனது கைப்பையை தவறவிட்டுச் சென்றுள்ளார். அவரை

ஐதரபாத்: ஆட்டோவுக்கான தினசரி வாடகையைக் கூட கட்ட முடியாமல் தவிக்கும் ஓட்டுநர் ஒருவர், தன் ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.1.4 லட்சத்தை நேர்மையாக அவரிடமே ஒப்படைத்துள்ளார்.latest tamil news
ஐதராபாத்தில் ஹசன் நகரைச் சேர்ந்தவர் முகமது ஹபீப். வாடகைக்கு எடுத்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் பயணித்த பெண் ஒருவர், தனது கைப்பையை தவறவிட்டுச் சென்றுள்ளார். அவரை விட்டுவிட்டு திரும்பும் போது தான் பின்னால் கைப்பை இருப்பதை ஹசன் பார்த்துள்ளார். அதைத் திரும்ப ஒப்படைக்க அந்த பெண்ணை இறக்கி விட்ட இடத்திற்குச் சென்று தேடியுள்ளார். அவரை காணவில்லை.


latest tamil newsபின், அருகிலுள்ள காலாபத்தார் காவல் நிலையத்தில் அந்த கைப்பையை ஒப்படைக்க சென்றார். அங்கு ஏற்கனவே கைப்பயை தவறவிட்ட பெண் புகார் அளிக்க வந்திருந்தார். இருவரும் அடையாளம் கண்டு கொண்டனர்.
போலீசார் முன்னிலையில் அப்பெண் கைப்பயை திறந்து பார்த்தார். அதில் ரூ.1.4 லட்சம் மதிப்பிலான பணக்கட்டுகள் சரியாக இருந்துள்ளன. நேர்மையாக நடந்துகொண்ட ஹபீபிற்கு அப்பெண் ரூ.5,000 வெகுமதி அளித்தார்.


ஏழ்மையிலும் நேர்மை!


'கொரோனா பயத்தினால் மக்கள் பயணம் செய்யவே அஞ்சுகின்றனர். இதனால் எங்களைப் போன்ற தினக்கூலிகளின் வாழ்க்கை கவலையளிப்பதாக உள்ளது. நாள் முழுக்க தெருக்களில் சுற்றி வந்தால் கூட ஆட்டோவுக்கான வாடகை ரூ.250 போக ரூ.300 கிடைப்பதே அரிதாகவுள்ளது' என, ஹபீப் கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த ஏழ்மையிலும் அவரது நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-202013:29:43 IST Report Abuse
Syed Mustafa அந்த மனசுதான் சார் கடவுள் , அடுத்தவன் பொருளுக்கு ஆசைப் படாதவன் உயர்ந்தவன்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
15-ஆக-202006:09:18 IST Report Abuse
RaajaRaja Cholan நல்ல மனது இருவருக்கும் வாழ்த்துக்கள் , கூடுதல் வாழ்த்து ஆட்டோ ஓட்டுனருக்கு . அந்த காவலர் மாஸ்க் போட்டிருக்க வேண்டும் , போட்டோ எடுக்கிறார்கள் என்று மாஸ்க்கை கழட்டி விட்டார் . இவருக்கு பயந்து ஆட்டோ ஓட்டுனரும் மாஸ்க்கை கழட்டி விட்டார் , என்ன கொஞ்சம் சமூக அக்கறை காட்டி இருக்கலாம்
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
14-ஆக-202021:58:19 IST Report Abuse
அப்பாவி வாழ்த்துக்கள். எங்கே சாங்கி பயலுக யயரையும் காணோம். இது ஒரு நாடகம் ஆட்டோ டிரைவரும் பணத்தை விட்டு போன அந்த அம்மாவும் இசுலாம் மதத்தை சேர்த்தவர்கள். எனவே மோடி சீ சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் சொல்லி வாங்க வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X