மதுரை :
துாத்துக்குடி செல்வவிநாயகபுரம் பொன்சேகர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: செல்வவிநாயகபுரம் சின்னத்துரை, ஜெசிந்தா. இவர்கள் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் ரூ.3 லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை சட்டவிரோதமாக தத்தெடுத்துள்ளனர். இதில் சந்தேகமடைந்து துாத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் புகார் செய்தோம். அவர் விசாரித்தார். குழந்தை மீட்கப்பட்டு, காப்பகத்தில் உள்ளது.சின்னதுரை, ஜெசிந்தா உட்பட சிலர் மீது ஏரல் போலீசார் வழக்குப் பதிந்தனர். யாரையும் கைது செய்யவில்லை. சி.பி.சி.ஐ.டி., அல்லது வேறு விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதி ஆர்.பொங்கியப்பன், 'போலீஸ் தரப்பில் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் ஆக.,18 ல் தெரிவிக்க வேண்டும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE