கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஆக 14, 2020
Share
Advertisement
மதுரை :சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். கொலை வழக்கு பதிந்து சி.பி.ஐ.,விசாரிக்கிறது.இவ்வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டு முருகன் உட்பட சிலர் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மதுரை நீதிமன்றத்தில் முருகன் தாக்கல்

மதுரை :

சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ைஸ போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் இறந்தனர். கொலை வழக்கு பதிந்து சி.பி.ஐ.,விசாரிக்கிறது.இவ்வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஏட்டு முருகன் உட்பட சிலர் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மதுரை நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த ஜாமின் மனு நிலுவையில் உள்ளது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், போலீஸ்காரர் வெயில் முத்து ஜாமின் மனுவை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி தாண்டவன் விசாரித்தார். சி.பி.ஐ.,தரப்பில், 'விசாரணை துவக்க நிலையில் உள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைப்பர். விசாரணையை பாதிக்கும்,' என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X