மதுரை :திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: சமயபுரம் மாரியம்மன் கோயில் அருகே எஸ்.கண்ணனுார் வடக்கு மடவாளத் தெருவில், அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுகிறது. இதனால் கோயில் கிழக்கு ராஜகோபுரம், பக்தர்கள் காண முடியாதபடி மறைக்கப்படும். கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு,'கட்டுமானத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எஸ்.கண்ணனுார் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆக.,31 க்கு ஒத்திவைக்கப்படுகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE