கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் முழு ஊரடங்கு : கலெக்டர் ஆஜராக உத்தரவு

Added : ஆக 14, 2020
Share
Advertisement


மதுரை:கொரோனாவை கட்டுப்படுத்த திருச்சி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த தாக்கலான வழக்கில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி வழக்கறிஞர் ராஜகோபால் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. முகக்கவசம் அணிவதில்லை. சென்னையிலிருந்து சிலர், இ-பாஸ் இல்லாமல் மற்றும் போலி இ-பாஸ் மூலம் சட்டவிரோதமாக திருச்சி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். கொரோனாவை கண்டறிய மருத்துவ முகாம்கள் நடத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால் அப்பாவி மக்கள் தேவையின்றி பாதிக்கப்படுகின்றனர். திருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியம் என டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. திருச்சியில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜகோபால் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு,'மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. திருச்சி கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆக.,27ல் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X