கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழில் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Added : ஆக 14, 2020
Share
Advertisement

சென்னை:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.மீனவ நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை 2020 மார்ச்சில் மத்திய அரசு வெளியிட்டது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் அரசிதழில் வெளியிட்டுள்ளது.அறிக்கை குறித்து கருத்துக்களை தெரிவிக்கும்படி அரசு கோரியுள்ளது. பிராந்திய மொழிகளில் வரைவு அறிக்கையை வெளியிட வேண்டும். அதுவரை வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. 'வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முடியுமா' என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் ஆதி.குமரகுரு ஆஜராகி 'மும்பை கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வரைவு அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்' என்றனர்.இதையடுத்து வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு என 'வாட்ஸ் ஆப்' ல் வரும் தகவல் பற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு 'மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்யவில்லை' என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். விசாரணையை ஆக.,19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X