கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உரிமைக் குழுவுக்கு அனுப்பியது ஏன்

Added : ஆக 14, 2020
Share
Advertisement

சென்னை :

'சட்டசபையில் கண்ணியத்தை மீறும் வகையில் தடை செய்யப்பட்ட பொருளை எடுத்து வந்தது உரிமை மீறலா இல்லையா என்பதை ஆய்வு செய்யவே உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டுஉள்ளது' என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

சட்டசபைக்குள் தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் தடை செய்யப்பட்ட 'குட்கா'வை எடுத்து வந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு 'நோட்டீஸ்' அனுப்பியது.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் என்.ஆர்.இளங்கோ அமித் ஆனந்த் திவாரி ஆஜராகினர்.சட்டசபை செயலர் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடியதாவது:அரசு பெரும்பான்மையை இழக்கவில்லை; 124 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் பெரும்பான்மை குறைவாக இருந்ததால் தான் 21 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவது தவறு. சபையின் மாண்பை குறைக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருளை எடுத்து வந்ததற்காக உரிமை குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.இவ்வாறு அவர் வாதாடினார்.உரிமைக் குழு சார்பில் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமயாஜி வாதாடியதாவது:இந்த பிரச்னையில் உரிமை குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. முன்கூட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டசபையின் கண்ணியத்தை மீறும் வகையில் தடை செய்யப்பட்ட பொருளை எடுத்து வந்தது உரிமை மீறலா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உரிமை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.சபையில் இந்தப் பிரச்னை பலமுறை எழுப்பப்பட்டு அதற்கு உரிய பதிலும் அளிக்கப்பட்டு விட்டது. சபையின் கண்ணியத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் காக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.வழக்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X