பொது செய்தி

இந்தியா

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதல்வர் அறிவிப்பு

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
தமிழகம், இபாஸ், ஆகஸ்ட்17, அனைவருக்கும், முதல்வர், இபிஎஸ், பழனிசாமி, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, e pass, lockdown, curfew, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai,

சென்னை: ஆக.,17 முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.


latest tamil news


நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


latest tamil news


இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) வரும் ஆக.,17ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளி நாடு, வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு இந்த தளர்வு பொருந்தாது. ஏற்கனவே இருக்கும் நடைமுறையே பின்பற்றப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
14-ஆக-202019:28:16 IST Report Abuse
தல புராணம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்.. முழுஆண்டு தேர்வு எழுதினவங்க எல்லாரும் பாஸ்.
Rate this:
அறவோன் - Chennai,இந்தியா
14-ஆக-202020:13:18 IST Report Abuse
அறவோன்எழுதாமலேயே பாஸ் 😂...
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
14-ஆக-202019:03:28 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy இங்கே பலர் தங்கள் கருத்தினை பதிவு செய்தது போலவே, பொது போக்குவரத்தை தொடங்காமல் இ பாஸ் வழங்குவது வசதி படைத்தவர்களுக்கே உதவும். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது, மக்களுக்கு என்ன உணவு சாப்பிடவேண்டும் எந்த சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவும் வந்துவிட்டது. எவ்வித கட்டுப்பாடுமின்றி அனைத்தும் கொரோனாவுக்கு முன்பிருந்தது போலவே செயல்படலாம் என்று அறிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. காலம் கடந்து செயல்பட்டால் எவ்வித பலனும் இருக்காது, விளைவுகள் தான் மோசமாக இருக்கும். அந்த விளைவினை ஒரு பெரும் வசதி படைத்த அரசால் கூட சமாளிக்க முயல்வது மற்றும் அதனைக் கடந்து வருவது ஒரு பெரும் சவாலாக ப்ரயத்தனமாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஆக-202017:21:43 IST Report Abuse
RajanRajan ஆகா அண்ணா இ பாஸ் ஐ, - ஓசி பாஸ் பண்ணீட்டாங்கடோய். வாழ்க அம்மாநாமம் சகோதரிநாமம் அண்ணாநாமம் திராவிடநாமம் வாழ்க வாழ்க.. எல்லோரும் பட்டாசு வெடிச்சு கொண்டாடுங்கப்பா. குரானாவுக்கு ஜெ போடுங்க ஓ போடுங்க முடிஞ்சா மொத்தத்தையும் போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X