பொது செய்தி

இந்தியா

சம்பள குறைப்பு: பஞ்சாப் அரசுக்கு அறிவுரை

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பஞ்சாப், சம்பளம், மான்டேக் சிங் அலுவாலியா

அமிர்தசரஸ்: மாநில அரசு ஊழியர்களுக்கு , மத்திய அரசு வழங்கும் சலுகைகளை மட்டும் வழங்கி, தற்காலிகமாக சம்பளத்தை குறைக்கும்படி, மாநில அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில நிதி நிலைமை குறித்து ஆராய மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு ஒன்றை பஞ்சாப் மாநில அரசு அமைத்தது.

இந்த குழு அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநில அரசின் நிதி நிலைமையை சமாளிக்க, மற்ற மாநில அரசுகளை போல், அனைத்து துறை ஊழியர்களின் சம்பளத்திலும், குறிப்பிட்ட சதவீத தொகையை குறைக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., (dearness allownaces) வழங்குவதை மாநில அரசு தாமதபடுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு டிஏ , சம்பள உயர்வுக்கு பின் அரியர் தொகையை வழங்குவது அவசியமில்லை.


latest tamil news


பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள படிகள், மத்திய அரசை காட்டிலும் அதிகம் உள்ளது. அதனை குறைக்க தேவையில்லை. இருப்பினும், மத்திய அரசின் சம்பள படிகள், அதற்கு சமமாகும் வரை, மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக எந்த சலுகையும் வழங்க வேண்டாம். மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கான தொழில் வரியை ரூ.2,500ல் இருந்து 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். அடுத்த சில ஆண்டுகளக்கு அரசு பணியிடங்களுக்கு புதிய நியமனங்கள் கூடாது என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஆக-202021:52:15 IST Report Abuse
தமிழ்வேல் எங்க ஊரு சத்த சபையில் அவுங்களே அவுங்களுக்கு சட்டம்போட்டு சம்பளத்தை ஏத்திக்கிட்டாங்க.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
14-ஆக-202019:04:04 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. முதலில் நீங்கள் நிபுணர்கள் வாங்கும் சம்பளத்தை குறைத்து முன்மாதிரியா இருக்க பாருங்கள்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-ஆக-202018:54:22 IST Report Abuse
vbs manian ஆச்சர்யமாக இருக்கிறது. கழகம் கவனிக்குமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X