தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
தொழிற்சாலைகள், மின்கட்டணம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,

சென்னை: ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை குறைந்தளவு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 3 மாதங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து, மத்திய , மாநில அரசுகள் அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தொழிற்சாலைகள் செயல்பட துவங்கின. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் 90 சதவீத மின் கட்டணத்தை செலுத்தும்படி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது.


latest tamil news


இதனையடுத்து தொழிற்சாலைகளுக்கு அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 90 சதவீத மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை குறைந்தளவு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - சைதாப்பேட்டை,இந்தியா
14-ஆக-202018:22:48 IST Report Abuse
கொக்கி குமாரு இதற்குத்தான் திருட்டு தீம்கா ஆட்சியில் இருக்கணும்னு சொல்றது. அவங்க ஆட்சியில் இருந்தா மிக மிக குறைந்த அளவே மின்சார கட்டணம் இருக்கும். பின் குறிப்பு: மின்சாரம் இருந்தானே கட்டணம் வரும்.
Rate this:
Cancel
RUPA - KOLKATA,இந்தியா
14-ஆக-202018:10:00 IST Report Abuse
RUPA ILAVASA MINSARAM THARA VENDUM
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-202016:45:55 IST Report Abuse
Bhaskaran மின்வாரியம் சுத்த கேனயனாக இருப்பாங்க போலிருக்கு .தொழில் சுத்தமா இல்லை கட்டணம் மட்டும் எப்படிகட்டுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X