நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி

Added : ஆக 14, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
அசோக் கெலாட், சச்சின்பைலட், ராஜஸ்தான், நம்பிக்கை ஓட்டெடுப்பு,  சட்டசபை, காங்கிரஸ்,

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெலாட்டுக்கு எதிராக, சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன.சச்சின் பைலட் கோஷ்டியின் போர்க்கொடியால், கெலாட் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சட்டசபையை கூட்ட, கெலாட் அரசு, கவர்னருக்கு, நான்கு முறை கோரிக்கை விடுத்தது.இதையேற்று, ஆக., 14ம் தேதி முதல், சட்டசபை கூட்டத்தை நடத்த, கவர்னர் ஒப்புதல் அளித்தார்.இந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க, கெலாட் திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையே, டில்லியில், காங்., பொதுச் செயலர் பிரியங்கா, எம்.பி., ராகுல் ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது. அசோக் கெலாட்டுடன் இணைந்து பணியாற்ற, சச்சின் பைலட் சம்மதித்தார்.இதனால், அசோக் கெலாட் அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து விலகியது. ஹரியானாவின் மனேசரில் தங்கியிருந்த, சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களும், ஜெய்ப்பூருக்கு திரும்பினர்.


latest tamil news


இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபையில், அசோக் கெலாட் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், குரல் ஓட்டெடுப்பு மூலம் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
15-ஆக-202012:24:49 IST Report Abuse
Kumar அசோக் கெலோட் வெற்றி .
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஆக-202018:02:42 IST Report Abuse
A.George Alphonse இது காங்கிரசுக்கு நிரந்தர வெற்றி அல்ல. எந்த நேரமும் ஆட்சி கவிழலாம்.இது வழக்கமாக எல்லா மாநிலங்களிலும் நிகழும் நிகழ்வுகள்தான்.ஒன்றும் புதியது அல்ல.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
14-ஆக-202017:00:14 IST Report Abuse
Nagarajan D பூர்ண ஆயுசு நித்தய கண்டம் காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தானில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X