பொது செய்தி

இந்தியா

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹெர்பல் சேலைகள்: ம.பி.,யில் அறிமுகம்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

போபால்: கொரோனா பரவலால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் முன்னுரிமை அளித்து வரும் நிலையில், ம.பி.,யில் சிறப்பு ஹெர்பல் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



latest tamil news




ம.பி., அரசின் கைத்தறி மற்றும் கைவினைபொருட்கள் நிறுவனம், 'ஆயுர்வாஸ்த்ரா' என்ற பெயரில் மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹெர்பல் சேலைகளை விற்பனை செய்து வருகிறது. 'பண்டைய மூலிகை மசாலாப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால், இந்த சேலையை அணிவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்' எனத் தெரிவித்துள்ளது.


latest tamil news



போபாலை சேர்ந்த ஐவுளித்துறை நிபுணரான வினோத் மாலேவர் தெரிவித்துள்ளதாவது:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கிராம்பு, ஏலக்காய், லவங்கபட்டை, குருமிளகு, சீரகம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஹெர்பல் சேலை தயாரிக்கப்படுகிறது. அனைத்து ஹெர்பல் பொருட்களையும் நன்றாக அரைத்து, 48 மணி நேரத்திற்கு மேல் தண்ணீரில் ஊற வைக்கிறோம். பின்னர் அதை சூடாக்கி, அதில் இருந்து உருவாகும் நீராவியை துணிக்கு அளிக்கிறோம். அதன்பின், சில மணிநேரத்தில் சேலை அல்லது முகக்கவசங்களை தயாரிக்கிறோம். ஒரு ஹெர்பல் சேலையை உருவாக்குவதற்கு, ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை தேவைப்படும்.


latest tamil news



ஹெர்பல் சேலையை அணிந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தொற்று நோய்க்கு எதிராக செய்யப்படும் பல நூற்றாண்டு பழமையான முறையாகும். ம.பி., அரசின் விற்பனை மையங்களில் ஹெர்பல் சேலைகளை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு போபால் மற்றும் இந்தூரில் உள்ள ஷோரூம்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில், நாடு முழுவதும் உள்ள 36 ஷோரூம்களில் ஹெர்பல் சேலைகள் விற்பனை வரும். ஒரு ஹெர்பல் சேலைகளின் விலை 3,000 ரூபாயில் இருந்து துவங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக ஹெர்பல் சேலைகள் அல்லது முகக்கவசத்தை அணிவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவ ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202020:35:50 IST Report Abuse
Visu Iyer மூன்று ஆயிரம் என்பது குறைவு.. இதன் விலை குறைந்த பட்சம் ரூபாய் பத்தாயிரமாவது வைத்து இருக்க வேண்டும்.. ஏலக்காய் விலை கிலோ இரண்டாயிரம் விற்கிறது.. இது போல மற்ற மூலிகை பொருட்கள்.. அதனால் இதன் விலையினை ரூபாய் பத்தாயிரமாவது வைத்து இருக்க வேண்டும்.. இந்த வியாபாரி நட்ட பட்டு இது போல தயாரிக்காமல் போயிடுவாரோன்னு தான் கவலையா இருக்கு.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
14-ஆக-202020:33:51 IST Report Abuse
Visu Iyer இதில் சுடிதார் தைத்து போட்டுக்கொள்ளலாமா?
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-202018:36:03 IST Report Abuse
babu இந்தியாவில் இந்த மாதிரி விஷயங்களுக்கு நஷ்டஈடு வாங்குவதற்குள் ஆயுசு முடிந்துவிடும் என்பதால் வியாபாரிகள் வாய்க்கு வந்ததை அடித்து விடுவது தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X