பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பி., உடல்நிலை தேற பிரபலங்கள் பிரார்த்தனை

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட. யாரையும் எடுத்தெறிந்து பேசாதவர், அடுத்தவர்களையும் மதிக்கும் பண்பு உடையவர். இந்த கொரோனா காலத்தில் கூட வீட்டில் இருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை பாடி அதன் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை,
SP Balasubrahmanyam, SPB, covdi19, coronavirus,எஸ்பிபி, பாடகர், உடல்நிலை, சினிமா, பிரபலங்கள், பிரார்த்தனை

சென்னை: தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதரும் கூட. யாரையும் எடுத்தெறிந்து பேசாதவர், அடுத்தவர்களையும் மதிக்கும் பண்பு உடையவர். இந்த கொரோனா காலத்தில் கூட வீட்டில் இருந்த ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களை பாடி அதன் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு கொடுத்து உதவினார்.

அப்படிப்பட்ட அவர் இப்போது கொரோனா நோய் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக உள்ளார். அவரை நல்லபடியாக குணமாக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அதேசமயம் ரசிகர்கள் மட்டுமல்லாதுதிரையுலகினர் பலரும் அவர் நலமாக வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


latest tamil news
இளையராஜா


இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், 'எஸ்.பி.பி., குணமடைய பிரார்த்திக்கிறேன்; நமது இருவருக்கும் இடையே கலை உலகையும் தாண்டிய நட்பு உள்ளது' என தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான்


இசையமைப்பாளர் ரஹ்மான் டுவிட்டரில், ''அனைத்து இசை ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். லெஜெண்ட் சிங்கர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமாகவேண்டி என்னுடன் இணைந்து கடவுளை வேண்டுங்கள். தனது அற்புதமான குரலால் பல மகிழ்வுகளை தந்தவர் என பதிவிட்டுள்ளார்.


பாரதிராஜா


இயக்குனர் பாரதிராஜா, ''என் நண்பன் பாலு தன்னம்பிக்கையானவன், வலிமையானவன். அவன் தொழும் தெய்வங்களும், நான் வணங்கும் இயற்கையும் அவனை உயிர்ப்பிக்கும். மீண்டு வருவான் காத்திருக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.


அனிருத்


இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில், ''சீக்கிரம் நலமாகி வாருங்கள் எஸ்.பி.பி. நீங்கள் விரைந்து குணமாக கடவுளை வேண்டுகிறேன்'' எனபதிவிட்டுள்ளார்.


சவுந்தர்யா ரஜினி


ரஜினியின் மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, ''சீக்கிரம் நலமாகி வாருங்கள் எஸ்.பி.பி'' என பதிவிட்டுள்ளார்.


தேவிஸ்ரீ பிரசாத்


இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் டுவிட்டரில், ''பாடும் கடவுள் எஸ்.பி.பி. நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள். அவர் நலமாக அனைவரும் கடவுளிடம் வேண்டுங்கள்'' என பதிவிட்டுள்ளார்.


தனுஷ்


நடிகர் தனுஷ் டுவிட்டரில், ''எஸ்.பி.பி. அவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்'' என தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
15-ஆக-202004:26:30 IST Report Abuse
Ram கொட்டும் மலை சாரல் உப்பு விற்க போனேன் .... காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் ...... VANTHU வீடு ஞஆ ந தங்கமே
Rate this:
Cancel
Michael Austine Anscur - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-202001:25:03 IST Report Abuse
Michael Austine Anscur மிகவும் நல்ல பாடகரான பாலசுப்ரமணியம் சார் குணமடைந்து திரும்பி வர வேண்டுகிறேன் இறைவனிடம். மைகேல் ஆஸ்டின் அன்ஸ்கர் துபாய் ஐக்கிய அரபூ நாடுகள்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
14-ஆக-202023:30:56 IST Report Abuse
Rameeparithi நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம். குரலால் வசியம் செய்த உன்னை ரசிகர்களின் வேண்டுதல் குரலால் ஆண்டவன் செவி சாய்த்து நோயிலிருந்து மீட்டுவிடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X