டில்லி:எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை| Dinamalar

டில்லி:எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூறப்படுவதாவது: தெற்கு டில்லியை சேர்ந்த கவுதம் நகரில்வசித்து வருபவர் மோஹித் சிங்லா. இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் போலீசாரின் கண்ட்ரோல் ரூமிற்கு போன்கால் ஒன்று வந்தது. அதில் மோஹித்சிங்லாவின் வீட்டில்

புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: தெற்கு டில்லியை சேர்ந்த கவுதம் நகரில்வசித்து வருபவர் மோஹித் சிங்லா. இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் போலீசாரின் கண்ட்ரோல் ரூமிற்கு போன்கால் ஒன்று வந்தது. அதில் மோஹித்சிங்லாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது அவர் தூக்கிட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

போலீஸ் அதிகாரி அப்துல் தாக்கூர் கூறுகையில் டாக்டர் மோஹித் சிங்லா கடைசியாக கடந்த செவ்வாய்கிிழமை மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார். மனச்சோர்வு காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என கூறினார்.


latest tamil news



கடந்த சில மாதங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்காக பணியாற்றி வரும் டாக்டர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X