ஏர் இந்தியாவை 'அழுகிய டி'க்கு விற்றால் கிரிமினல் வழக்கு தான்: சுப்ரமணியன் சாமி

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (26)
Share
Advertisement
Air India, Subramanian Swamy, BJP, TATA

புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தை 'அழுகிய டி' நிறுவனத்துக்கு விற்றால் நான் கிரிமினல் வழக்கு தொடருவேன் என சுப்ரமணியன் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் 'டி' என, டாடா நிறுவனத்தை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மத்திய அரசு, 76 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. இதை முழுவதுமாக விற்பனை செய்ய, முடிவு செய்துள்ள மத்திய அரசு, ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. அதற்கு ஆக.,31 கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது. 'டாடா' குழுமம் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதனை டாடா நிறுவனமும் உறுதி படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய டாடா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஏர் இந்தியா நிறுவனத்தை விலைக்கு வாங்க பரிசீலனை நடந்து வருகிறது. சரியான நேரத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.


latest tamil newsஇந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி டுவிட்டரில் பதிவிட்டதாவது: 'ஏர் ஏசியா' நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கு, துபாயின் பயங்கரவாதிக்கு பணம் தந்த குற்றச்சாட்டு, விஸ்தாரா விமான நிறுவனத்தை, ஏர் ஏசியா நிறுவனத்துடன் சேர்ந்து துவங்க மோசடி, நீரா ராடியா டேப் விவகாரம் என அனைத்தையும் தாண்டி, 'அழுகிய டி' நிறுவனத்துக்கு விற்கப்பட்டால், அரசின் முக்கிய புள்ளிகள் மீது நான் கிரிமினல் வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
19-ஆக-202021:03:50 IST Report Abuse
mohan என்ன பேசுறார்....
Rate this:
Cancel
19-ஆக-202015:45:06 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தனியாரிடம் கொடுத்து அரசு கண்காணிக்கலாம் அரசு சேவைகளில் சுணக்கம் மற்றும் அலட்சியம் அதிகம் உள்ளது.
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஆக-202010:37:50 IST Report Abuse
Yaro Oruvan பாவம் பதவி இல்லையென்றால் இந்த அரசியல்வியாதிகள் நிலைமை படு கேவலம் ஆகிவிடுகிறது.. சு சாமி ஒரு சில நல்ல காரியங்களை நாட்டுக்கு செய்துள்ளார்.. ஆனாலும் வாஜ்பாய் அரசுக்கு அவர் செய்த துரோகத்தை மோடி மன்னிப்பதாக இல்லை.. என்ன கூவு கூவினாலும் நோ மினிஸ்டர் போஸ்ட் சுவாமி.. உங்களோட பாட்சா மோடி + அமித்ஷா ஜோடியிடம் எடுபடாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X