பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் அதிகரிப்பு , இறப்பு விகிதம் குறைவு ; அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020
Share
Advertisement

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவும், மீட்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.95 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 71.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.latest tamil newsகொரோனா தொற்று நோய்களின் பாதிப்புகளை தணிப்பதில் இந்தியா தனது சிறந்த முயற்சியை செய்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கான மீட்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது என மத்திய சுகாதாரதுறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்தார். டில்லி மருத்துவ சங்கத்தின் அறக்கட்டளை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். கடமையைச் செய்யும் போது உயிரை இழந்த 245 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் (கொரோனா வீரர்கள்) ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

அவர் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்புகளை குறைப்பதில் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்தியாவின் மீட்பு விகிதம் உலக நாடுகளில் மிக உயர்ந்தது. ஆனால் கொரோனாவிற்கான இறப்பு விகிதம் மிக குறைவு. உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக, 2025 க்குள் காசநோயை அகற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. 2022 இறுதிக்குள் Ayushman Bharat-PMJAY திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் ஆரோக்ய / சுகாதார மையங்களை அமைக்க அரசு உறுதி செய்துள்ளது. இவ்வாறு கூறினார். மேலும் 1994 ஆம் ஆண்டில் முதல் 'பல்ஸ் போலியோ பிரச்சாரத்தை' ( Pulse Polio Campaign ) வெற்றிகரமாக ஆக்குவதில் தில்லி மருத்துவ சங்க உறுப்பினர்கள் தங்கள் நேர்மையான பங்களிப்புக்கு வர்தன் தனது நன்றியைத் தெரிவித்தார்.


latest tamil newsஇந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதனால் நாட்டில் தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 17,51,555 ஆக அதிகரித்தது. நாட்டில் கொரோனா மீட்பு விகிதம் 71.17 சதவீதமாக உயர்ந்தது. தற்போது நாட்டின் இறப்பு விகிதம் (CFR) 1.95 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.5 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 71 சதவீதத்தை தாண்டியது. தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 24,61,190 ஆக உயர்ந்தது. மத்திய அரசின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், கடுமையான பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதன் மூலமாகவும் , சுகாதார பணியாளர்களால் பாதிப்பு அதிகமானவரை பராமரிப்பதன் மூலமாகவும், நாடு முழுவதும் (CFR -Case Fertility Rate) குறைவதற்கான வழியாகும்.

தற்போது 6,61,595 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்புகளில் 26.88 சதவீதம் ஆகும். கொரோனா மீட்பு விகிதம் ஜூன் மத்தியில் 53 சதவீதமாக இருந்தது. நேற்று நிலவரங்களுடன் ஒப்பிடுகையில் 71.17 சதவீதமாக அதிகரித்தது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 22,87,511 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்தஎண்ணிக்கை 48,040 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 8,48,728 சோதனைகள் நடத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட மொத்த சோதனைகள் 2,76,94,416 ஆக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X