பொது செய்தி

இந்தியா

23 லட்சம் பிபிஇ கிட்டுகள் 5 நாடுகளுக்கு ஏற்றுமதி

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: அமெரிக்கா, இங்கிலாந்து, யு.ஏ.இ.,உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 23 லட்சம் பிபி இ கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பிபிஇ கிட்டுகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதில் சுயசார்பு நிலை அடைந்துள்ளது. கடந்த மார்ச்- ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சுமார் 1.40 கோடி பிபிஇ கிட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1.28 கோடி அளவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு கொள்கைமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.தொற்றுநோயின் துவக்கத்தில், என்95 முகமூடிகள், பிபிஇ கருவிகள், வென்டிலேட்டர்கள் போன்ற அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களுக்கும் உலக அளவில் பற்றாக்குறை இருந்தது.


latest tamil news



பெரும்பாலான தயாரிப்புகள் ஆரம்பத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை.சுகாதாரம், ஜவுளி, மருந்துகள், கைத்தொழில்,உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பலவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், தொற்றுநோயை மருத்துவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரலின் திருத்தப்பட்ட அறிவிப்பின் மூலம் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய முடிந்தது.

இதன்விளைவாக ஜூலை மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், செனகல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு 23 லட்சம் பிபிஇ கிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Krishnan - Coimbatore,இந்தியா
15-ஆக-202005:06:00 IST Report Abuse
Hari Krishnan நம்மை எட்டும் தீமைகளை நன்மையாக்கி மாற்றும் நமது நாட்டிற்கும் நமது அரசிற்கும் இனிய சுதந்திர திருநாள். நம் முன்னோர்களின் உழைப்பிற்கு கிடைத்த பெருமையை பேணி பாதுகாப்போம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X