ஐரோப்பாவில் சமூக இடைவெளியால் 45 சதவீதம் கொரோனா பரவல் குறைவு| Dinamalar

ஐரோப்பாவில் சமூக இடைவெளியால் 45 சதவீதம் கொரோனா பரவல் குறைவு

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (1)
Share

ஐரோப்பிய நாடுகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட முக்கிய சுகாதார நடவடிக்கைகளால் 45 சதவீதம் கொரோனா பரவல் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயினும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக கழுவுவது உள்ளிட்ட சுகாதார செயல்கள் அனைத்து நாடுகளிலும் வலியுறுத்தப் படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் 45% கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக டென்மார்க் பல்கலை நடத்திய ஆய்வில் கூறுகையில், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா விதிமுறைகளால், மக்கள் நடமாட்டம் குறைவாகி வருகிறது. இதன் மூலம் அங்கு 30 சதவீதம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது, ஸ்வீடனில் விழிப்புணர்வுகளால் ஏற்கனவே நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அங்கு சமூக இடைவெளி அவசியமாக பின்பற்றப்படுகிறது. இதனால் மொத்த பாதிப்புகளை குறைக்க முடியாவிட்டாலும், சமூக இடைவெளி மற்றும் நோயின் தீவிரம் குறித்த விழிப்புணர்வுகளால் மாறுதல்களை ஏற்படுத்தலாம். ஒட்டுமொத்தமாக ஐரோப்பா நாடுகளில் சமூக இடைவெளி தொடர்பான விழிப்புணர்வு காரணமாக 45% தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X