பொது செய்தி

இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020
Share
Advertisement
kozhikode, accident, rescue operations, people, officers, corona, positive, கோழிக்கோடு, விமான விபத்து, மீட்புப் பணி, அதிகாரிகள், கொரோனா, உறுதி

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடந்த ஆக.,7 வெள்ளிக்கிழமை இரவு, துபாயில் இருந்து 190 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மலப்புரம் மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், மாவட்ட காவல்துறை தலைவர் உள்ளிட்டோருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மாவட்ட கலெக்டர் கே.கோபாலகிருஷ்ணன், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலும் எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவருடன் இணைந்து பணியாற்றிய துணை கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரும் ஒரு வார காலமாகவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.


latest tamil news



கேரளாவில் கொரோனா பரவி வரும் சூழலில் விமான விபத்தால் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு மாநில சுகாதாரத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மலப்புரம் மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரி அப்துல் கரீமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X