கேரள தங்க கடத்தல் வழக்கு: 6 இடங்களில் அதிரடி ரெய்டு

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
kerala, gold smuggling case, NIA

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 6 இடங்களில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை நடத்தியது.

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இதையடுத்து, சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனமும், சுங்கத்துறையும் விசாரித்து வருகின்றன.


latest tamil news


ஸ்வப்னா சுரேசிடம் நடத்திய விசாரணையில், 150 கிலோ தங்கத்திற்கும் மேல் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜு மற்றும் அம்ஜத் அலி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் 4 பேருக்கும் சொந்தமான மலப்புரம் மற்றும் கோழிக்கோடு நகரங்களில் உள்ள 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்க கடத்தல் வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA G india - chennai,இந்தியா
15-ஆக-202011:34:05 IST Report Abuse
SIVA G  india ஆனலைன் சூதாட்டம் .உங்க அடமான தங்கத்தை நல்ல விலையில் எடுத்து கொள்கிறாம் நடிகைகளின் விளம்பரம்.கடத்தல் தங்கம், அடமான தங்க விளம்பரம் நமக்கு தெரிந்ததை யோசிப்போம். என்.ஐ.ஏ., அதிகாரிகள் இனி இவ்விளம்பரம் பற்றி யோசிப்பார்கள்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஆக-202010:33:03 IST Report Abuse
Tamilan இதேபோல், தமிழகம் உட்பட்ட நாடு முழுவதும் உள்ள கடத்தல்காரர்களை பிடிக்க வேண்டும் . முக்கியமாக ஹைதராபாத் , மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள பல கடத்தல்காரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது .
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
15-ஆக-202009:53:43 IST Report Abuse
PR Makudeswaran action after one month this is not immediate action. most of the ரெகார்டஸ் மயிட் ஹாட் been டெஸ்ட்ரோய்ட். ஒரு மாதம் கழித்து நடவடிக்கை ithuvaa அதிரடி. பாதி காணாமலே போயிருக்கும். எங்கெங்கு எத்தனை கரம் மாறியதோ அந்த ஸ்வப்னாவிற்கு அல்லது இறைவனுக்கு தான் வெளிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X