பொது செய்தி

இந்தியா

'சீன வீரர்களுடன் நள்ளிரவில் 20 மணி நேரம் போரிட்டோம்'

Updated : ஆக 14, 2020 | Added : ஆக 14, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Chinese, Ladakh, Border Force ITBP

புதுடில்லி: 'சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டோம்' என இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இதனையடுத்து, எல்லையில் இருநாடுகளும் படைகளை குவிக்க பதற்றம் நிலவியது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்தையில், எல்லைகள் படைகள் விலக்க ஒப்புதல் தெரிவித்ததையடுத்து அமைதி திரும்பியது.


latest tamil news



இந்நிலையில், சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 17 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கடுமையாக போரிட்டதாக இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தியில் தெரிவித்ததாவது: தற்காப்புக்காக சீன வீரர்களை கடுமையாக தாக்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

வீரர்கள் திறம்பட போரிட்டதுடன், காயமடைந்த நமது வீரர்களையும், அங்கிருந்து பின்னுக்கு கொண்டு வந்தனர். கல்வீசி தாக்கிய சீன வீரர்களுக்கு தக்க பதிலடி தரப்பட்டது. ஒரு நாள் இரவு முழுவதும் சீன வீரர்களுடன் போரிட்ட போதும், நமது வீரர்கள் குறைந்த அளவில் தான் காயமடைந்தனர். சீன வீரர்களை எதிர்த்து அந்த இரவு முழுவதும் 17 முதல் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டோம். இவ்வாறு இந்தோ - திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஆக-202022:53:32 IST Report Abuse
தமிழ்வேல் அன்புள்ள ஆசிரியருக்கு, தயவுசெய்து புதியவை, பழையவை,அதிகம் விவாதிக்கப்பட்டவை, மிக மிக தரமானவை, மிக தரமானவைதரமானவை இதனுடன் நீக்கப்பட்டவை (சங்கிகள் கேட்பதால்) என ஒரு விண்டோ திறக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் தேசவிரோத சீன மற்றும் பாக் கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்டவேண்டும்...
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
15-ஆக-202012:04:47 IST Report Abuse
SIVA G  india இந்த மாதிரி ஜவான்களை விட சினிமா ஹிரோ எல்லாவற்றை செய்வதாகவும் நினக்கும் கூமுட்டைகள் ரசிகர்கள் .நேற்று அவன் தலைவன் ரிலீஸ் ஆகாத படத்தை பார்க்காமல் இறக்க போவதாக ஏக்கமா சொல்லி தற்கொலை செய்துள்ளான். தேசத்திற்க்கு ஏதும் செய்யாமல் தன் ரசிகன் உழைக்கும் உழைப்பில் 100 ல் ஒரு பங்கு உழைப்பு கூட இல்லாத சுயநல திரைபட ஹிரோ, அந்த ரசிகன் பெறும் சம்பளத்தை போல பல லட்ஷம் மடங்கு சம்பளம் பெறுகிறான். நிஜ ஹிரோகளின் கடமை உணர்வும் தியகமும் உணராமல் கானல் நீர் ஹிரோ பின் செல்லும் இளைஞர்களை நினைத்தால் மனம் கனக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X