சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட மூவர் கைது

Added : ஆக 14, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
நாகர்கோவில்; கள்ளக்காதல் விவகாரத்தில், கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 38; போட்டோ கிராபர். மனைவி காயத்ரி, 35. திருமணமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் மகன் உள்ளார்.இரும்பு கம்பிகடந்த, 4ம் தேதி, மர்ம நபர்கள் வீடு புகுந்து, இரும்பு கம்பியால் கணேஷை தாக்கிவிட்டு
 கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட மூவர் கைது

நாகர்கோவில்; கள்ளக்காதல் விவகாரத்தில், கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 38; போட்டோ கிராபர். மனைவி காயத்ரி, 35. திருமணமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. 5 வயதில் மகன் உள்ளார்.இரும்பு கம்பிகடந்த, 4ம் தேதி, மர்ம நபர்கள் வீடு புகுந்து, இரும்பு கம்பியால் கணேஷை தாக்கிவிட்டு சென்றனர்.

பலத்த காயம்அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மனைவி காயத்ரி, மருத்துவமனையில் சேர்த்தார். அவருக்கு நினைவு திரும்பியது.சந்தேகத்தின் அடிப்படையில், காயத்ரியிடம் போலீசார் விசாரித்தனர். காயத்ரி, செட்டி குளத்தில் நகல் எடுக்கும் கடை மற்றும் மழலையர் பள்ளி நடத்தும் யாசின் என்பவரிடம், பலமுறை பேசியது தெரிந்தது. திருமணத்துக்கு முன்பே யாசினுக்கும், காயத்ரிக்கும் பழக்கம் இருந்துள்ளது. திருமணத்துக்கு பின், அவரது பள்ளியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.காயத்ரி, வீட்டு பத்திரத்தை அடகு வைத்து, யாசினுக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை உறவினருக்கு கொடுத்ததாக கணேஷிடம் தெரிவித்தார். நீண்ட நாட்களாக பணம் வராததால் கணேஷ், காயத்ரி இடையே பிரச்னை ஏற்பட்டது.யாசின் யோசனைப்படி, கூலிப்படையை ஏவி, கணேஷை கொல்ல முயன்றனர். இதற்காக, 45 - 46 வயது ஆண்கள் இருவருக்கு, 2 லட்சம் ரூபாய் பேசி, 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்து உள்ளனர்.

தனிப்படைஇருவரும் கணேஷை தாக்கிவிட்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்தார்.போலீஸ் விசாரணையில், மேற்கண்ட தகவல்களை காயத்ரி தெரிவித்தார். இதையடுத்து, காயத்ரி, கூலிப்படையினர் இருவரை கைது செய்த போலீசார், யாசினை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
18-ஆக-202018:36:48 IST Report Abuse
Balamurali Srinivasan தீர விசாரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
17-ஆக-202018:02:40 IST Report Abuse
periasamy இதிலும் சில சங்கிகள் மதம் பற்றி பேசுது என்ன செய்ய கல்லாக காதல் கொலையில் மதம் என்ன செய்யும்
Rate this:
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
19-ஆக-202003:16:48 IST Report Abuse
Maheshமதம் புத்தியை காட்டும்... அது சரி, மதம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் சங்கிகளா?...
Rate this:
Cancel
New Indian - India,இந்தியா
17-ஆக-202014:31:08 IST Report Abuse
New Indian 21 - ஆம் நூற்றாண்டிலும் கட்டாயக்கல்யாணம் செய்யும் சம்பிரதாயத்தை கடைபிடிக்கும் குடும்பங்கள் இது போன்ற பல சம்பவங்கள் தரும் பாடத்தை புரிந்து கொண்டு மாறுவது நன்று. துணைவனை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் பெயரளவில் என்றல்லாமல் உண்மையாக தரப்பட வேண்டும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுயம்வர முறையில் திருமணங்கள் நம் பாரதத்தில் நடந்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X