பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பாதிப்பு மீண்டும் 1,000த்தை தாண்டியது

Added : ஆக 15, 2020
Share
Advertisement
சென்னை; சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு வாரத்திற்கு பின், நேற்று மீண்டும், 1,000த்தை தாண்டியது. சென்னையில், 837 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 5,556 பேர் நலம் பெற்று, வீடு திரும்பினர். தொற்று உறுதிஇதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 134 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில், 70 ஆயிரத்து, 153 மாதிரிகள்

சென்னை; சென்னையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு வாரத்திற்கு பின், நேற்று மீண்டும், 1,000த்தை தாண்டியது.

சென்னையில், 837 பேர் உட்பட, மாநிலம் முழுதும், 5,556 பேர் நலம் பெற்று, வீடு திரும்பினர். தொற்று உறுதிஇதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 134 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில், 70 ஆயிரத்து, 153 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும், 1,187 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பின், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மீண்டும், 1,000த்தை தாண்டிஉள்ளது.அதேபோல், புறநகர் மாவட்டங்களான, திருவள்ளூரில், 495 பேர்; செங்கல்பட்டில், 437 பேர்; கோவையில், 385 பேர்; தேனியில், 367 பேர்; காஞ்சிபுரத்தில், 315 பேர்; கடலுாரில், 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை நடத்தப்பட்ட, 35.69 லட்சம் பரிசோதனைகளில், 1.29 லட்சம் பெண்கள் உட்பட, 3.26 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கைமாவட்ட வாரியாக, சென்னையில், ஒரு லட்சத்து, 14 ஆயிரத்து, 260 பேர்; செங்கல்பட்டில், 20 ஆயிரத்து, 80 பேர்; திருவள்ளூரில், 18 ஆயிரத்து, 958 பேர்; காஞ்சிபுரத்தில், 13 ஆயிரத்து, 409 பேர்; மதுரையில், 12 ஆயிரத்து, 561 பேர்; விருதுநகரில், 10 ஆயிரத்து, 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா சிகிச்சையில் இருந்து, நேற்று ஒரே நாளில், சென்னையில், 837 பேர் உட்பட, 5,556 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, 2.67 லட்சம் பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது, 53 ஆயிரத்து, 716 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்றைய இறப்பு பட்டியலில், 117 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை, 5,514 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 1,642 1,130 16செங்கல்பட்டு 20,080 16,668 335சென்னை 1,14,260 1,00,643 2,408கோவை 8,274 6,048 164கடலுார் 6,165 3,391 70தர்மபுரி 969 783 9திண்டுக்கல் 4,524 3,617 87ஈரோடு 1,334 799 20கள்ளக்குறிச்சி 4,776 4,061 44காஞ்சிபுரம் 13,409 11,195 168கன்னியாகுமரி 7,178 5,575 108கரூர் 939 693 18கிருஷ்ணகிரி 1,552 1,187 24மதுரை 12,561 11,195 309நாகை 1,422 809 16நாமக்கல் 1,144 847 18நீலகிரி 1,010 913 3பெரம்பலுார் 863 661 11புதுக்கோட்டை 3,818 2,632 48ராமநாதபுரம் 3,898 3,377 85ராணிப்பேட்டை 7,963 6,546 66சேலம் 5,537 3,873 69சிவகங்கை 3,271 2,775 75தென்காசி 3,725 2,313 61தஞ்சாவூர் 4,652 3,498 61தேனி 9,489 6,189 112திருப்பத்துார் 1,932 1,282 36திருவள்ளூர் 18,956 14,731 324திருவண்ணாமலை 8,514 6,418 114திருவாரூர் 2,202 1,815 18துாத்துக்குடி 9,790 8,372 83திருநெல்வேலி 7,229 5,675 110திருப்பூர் 1,431 932 40திருச்சி 5,654 4,666 80வேலுார் 8,078 6,664 106விழுப்புரம் 5,033 4,330 47விருதுநகர் 10,938 9,492 146வெளிநாட்டில் இருந்து வந்தோர் 868 817 1உள்நாட்டு விமான பயணியர் 735 630 0ரயில் பயணியர் 428 424 0மொத்தம் 3,26,245 2,67,015 5,514/***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X