குழந்தையுடன் வருவோருக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் வருவோருக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு

Added : ஆக 15, 2020
Share
சென்னை; வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் வருவோரில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வருவோரை, தனிமைப்படுத்துவதில் இருந்து, தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வருவோருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தவும், பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லையென்று

சென்னை; வெளிநாடுகளில் இருந்து, தமிழகம் வருவோரில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வருவோரை, தனிமைப்படுத்துவதில் இருந்து, தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வருவோருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தவும், பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லையென்று உறுதியானாலும், ஒரு வாரம் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பிறகே, வீடுகளுக்கு செல்ல, அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கான விதிமுறைகளில், புதிதாக இரண்டு விதிகளை இணைத்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் இருந்து, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வருவோர், விமான நிலையத்தில் இருந்து, தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.விமான பயணத்தை துவக்கும் முன், 96 மணி நேரத்திற்குள், கொரோனா பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லை என, சான்றிதழ் பெற்றவர்களும், விமான நிலையத்தில் இருந்து, தங்கள்வீடுகளுக்கு செல்லஅனுமதிக்கப்படுவர்.

இத்தகையோர், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவர்.மற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனையில், நோய் தொற்று இல்லை என்பது உறுதியானால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X