பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இதுவரை 26,996 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Added : ஆக 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 1,304 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். அங்கு இதுவரை மொத்தம் 26,996 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 65.39 சதவிகிதமாக உள்ளது.



latest tamil news




இருப்பினும் மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,277 ஆக உயர்ந்தது. மேலும் 10 பேர் பலியானதால் இதுவரை மாநில அளவில் கொரோனா பலி 139 ஆக உயர்ந்தது.


latest tamil news



புதிதாக நேற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் 310 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 198 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 180 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 114 பேருக்கும், ஆலப்பழா மாவட்டத்தில் 113 பேருக்கும், கோட்டயம் மாவட்டத்தில் 101 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 99 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தில் 95 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 80 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 75 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 58 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 57 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 49 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 40 பேருக்கும் தொற்று ஏற்பட்டது.

மாநிலம் முழுவதும் 1,55,025 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,42,291 பேர் வீடுகளிலும், தனிமை வார்டுகளிலும் உள்ளனர். 12,734 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 555 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மாநிலம் முழுவதும் உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
15-ஆக-202008:01:37 IST Report Abuse
Balasubramanian Ramanathan அடடா , என்ன ஒரு நல்ல செய்தி. தமிழனின் வாழ்வுக்கு சாப விமோசனம் கிடைத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X