கேரள முதல்வர் அலுவலகத்தில் ஸ்வப்னாவுக்கு அதிகாரம்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
kerala, gold smuggling case,Swapna Suresh, NIA

கொச்சி: கேரள தங்க கடத்தல் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் அம்மாநில முதல்வர் அலுவலகத்தில் வானளாவிய அதிகாரத்துடன் இருந்ததை விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினரும் நேற்று தெரிவித்தனர்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் ஸ்வப்னா சுரேஷ் சரித்குமார் சந்தீப் நாயர் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 5ல் காவலில் எடுத்து விசாரித்தனர். ஏழு நாட்களுக்கு வழங்கப்பட்ட காவல் பின் மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களது காவலை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்: ஸ்வப்னா சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரள முதல்வர் அலுவலகத்தில் அவர் வானளாவிய அதிகாரத்துடன் இருந்ததாக தெரிவித்தார். மேலும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததை ஒப்புக் கொண்டார்.


latest tamil news


ஸ்வப்னாவின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியது என்பதை சிவசங்கரும் நன்கு அறிந்துள்ளார். எனவே அவரிடம் விசாரணையை தொடர வேண்டிய அவசியம் உள்ளது. கேரள வெள்ள நிவாரணத்துக்காக 2018 அக்டோபர் 17 முதல் 21 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் கேரள அரசு நிதி திரட்டியது. அப்போது முதல்வரின் செயலர்களுடன் ஸ்வப்னா கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த புதிய தகவல்கள் குறித்து ஸ்வப்னா உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் உயர்மட்டத்தை சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். எனவே குற்றவாளிகளின் காவலை நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ஸ்வப்னா உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளின் காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
15-ஆக-202018:55:22 IST Report Abuse
sankaseshan நம்ம ஊர் கம்மிக்கழும் திராவிட கட்சிகளும் ஸ்வப்னசுந்தரியை குறித்தது வாய் திறக்கவில்லை .
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
15-ஆக-202020:23:07 IST Report Abuse
Sathya Dhara ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கோடி கோடி கோடி கோடி கோடி கொள்ளை, பச்சை பாவாடைகளுடன் ஜால்றா....மோதி எதிர்ப்பு.....தேசீய எதிர்ப்பு.....அவ்வப் போது ஏதாவது ஒரு நாயகியின் கொள்ளை கோடி கோடி கோடி கோடி கொள்ளை.....கூசாமல் பொய் பொய் பேட்டி, பொய் வசனங்கள், பொய் ஊடக ஜால்றா.....இத்தனை ஒற்றுமைகள் நமது பொய்டாலின், பொய் மொழி, பொய் நிதி, ஆகியவர்களுக்கும் ....சொப்பன சுந்தரிக்கும் இருப்பதைப்போலவே இருக்கிறது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். எப்படி வாய் திறப்பார்கள்.....?...
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
15-ஆக-202014:00:22 IST Report Abuse
Rameeparithi மீடியாவுக்கு பரபரப்பு செய்தி அவளவுதான் ஐசிஐசிஐ வங்கியின் சந்தா கோச்சர் வழக்கு என்ன ஆச்சு ...?
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
15-ஆக-202013:07:11 IST Report Abuse
Suppan ஜெயா ஜேடலிக்கு ஊழல் வழக்கில் தண்டனை உறுதியானது நாற்பது வருடம் கழித்து. இப்பொழுது அவர் மேல் முறையீடு செய்துள்ளார். இன்னும் எவ்வளவு வருடமாகுமோ அதே போல் இந்த வழக்கும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X