பொது செய்தி

இந்தியா

74வது சுதந்திர தின விழா; செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Independence Day, PM Modi, Red Fort, address the nation, PM, Modi

புதுடில்லி: இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று(ஆக.,15) டில்லி செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

செங்கோட்டையில் பிரமாண்டமாக நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டு எளிய முறையில் நடைபெற உள்ளது. முக்கிய விவிஐபி.,க்கள் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து நுழைவு வாயில்களிலும், தெர்மல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. 7வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடியின் உரை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.


latest tamil news




பலத்த பாதுகாப்பு:


பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


நிகழ்ச்சி நிரல்:


காலை 7.05: ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார்.

7.18 - 7.20 மணி: செங்கோட்டையின் லாகூர் கேட்டிற்கு குதிரைப்படை அணிவகுக்க வரும் பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு செயலர் அஜர்குமார் வரவேற்பர். முப்படைகள் அளிக்கும் மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொள்கிறார்,


latest tamil news


7.28 மணி: 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.

7.30 மணி: நாட்டுமக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-202004:09:54 IST Report Abuse
oce வட நாட்டில் தலைப்பாகைகளை‌ வித விதமாக கட்டுகிறார்கள்.இந்த நாகரிகம் பண்டைய வேத கால வட நாட்டின் ஐமபத்தாறு தேச அரச குடும்பங்களில் பின்பற்றப்பட்டது. தென்னாட்டு மன்னர்களும் பின்பற்றி தமது ஆட்சியின் செங்கோலுக்கு பெருமை சேர்த்தனர். அதை நினைவு கூறும் விதமாக பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் ராஜ முடியில் மிக அற்புதமாக காட்சி தருவது நமது பாரத பண்பாட்டின் தனி சிறப்பை காட்டுகிறது. இந்து கலாச்சாரம் வெல்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X