இந்திய எல்லையில் சீனா அத்துமீறல் அமெரிக்க செனட் கண்டன தீர்மானம்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
us senate, china, india, india china border, இந்திய எல்லையில் சீனா அத்துமீறல் அமெரிக்க செனட் கண்டன தீர்மானம்


வாஷிங்டன், : இந்தியாவின் லடாக் எல்லையில், சீனா மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து, அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையில், கண்டன தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பதற்றம்அமெரிக்காவில், குடியரசு கட்சி கொறடாவான, ஜான் கோர்னைன், செனட் தேர்வுக்குழு உறுப்பினர், மார்க் வார்னர் இருவரும். சீனாவின் அத்துமீறலை எதிர்த்து, கண்டன தீர்மானம் தாக்கல் செய்தனர்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்தியாவின் லடாக், சிக்கிம் பகுதிகளுக்கும், சீனாவுக்கும் இடையே, பொது எல்லைக்கோடு உள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம், லடாக்கின், பாங்காங் ஆறு அருகே, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அதை தடுக்க இந்தியா முயன்றபோது, இரு தரப்பினர் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, இப்பிரச்னையில் சுமூக தீர்வு காண, இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் இடையே, பேச்சு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சீன ராணுவம், பொது எல்லைக்கோட்டில் உள்ள, கல்வான் பள்ளத்தாக்கிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலும், சிக்கிம் எல்லையோரத்திலும் முன்னேறியது. ஒருபுறம் அமைதிப் பேச்சிலும், மறுபுறம், கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறல் நடவடிக்கையிலும், சீனா ஈடுபட்டது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 'டுவிட்டர்' பொது எல்லைக் கோட்டை மாற்றி அமைக்க முயற்சித்த சீன அரசின் செயலை, இத்தீர்மானம் வன்மையாக கண்டிக்கிறது. இரு நாடுகளும் பேச்சு நடத்தி, ஏப்ரலில் பொது எல்லையில் நிலவிய சூழலுக்கு திரும்ப வேண்டும்.இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு வலுவாக உள்ளது.


latest tamil news




இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா முயன்று வருவது பாராட்டத்தக்கது. சீனாவின் அத்துமீறலை எதிர்க்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா என்றும் ஆதரவு தரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த மாதம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும், இந்திய எல்லையில், சீனாவின் அத்துமீறலை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், இந்திய துாதர், தரன்ஜித் சிங் சந்துவிடம், இந்தியாவிற்கான ஆதரவை நேரிலும், 'டுவிட்டர்' வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
15-ஆக-202015:54:51 IST Report Abuse
vnatarajan அமெரிக்காவும் இதன் மூலம் காந்தி மகானின் அஹிம்சை பாதையில் செல்லவே விரும்புகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-ஆக-202009:22:48 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியாவின் அகிம்சைவழி பாதை அனைத்துநாடுகளையும் கவர்ந்த ஒன்றுதான் மதங்களால் வேறுபட்ட நாடுகள் கூட இந்தியாவை பாராட்டுகிறது காரணம் எல்லா நாடுகளுமே முன்னேறவேண்டும் அந்த நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் மன நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று நினைக்கக்கூடிய நாடுதான் நம் பாரதநாடு. இன்றய நிலையில் நம் பாரத நாடு எல்லா நாடுகளுக்கும் வழிகாட்டியாக உள்ளது இதுதானே உண்மை.எப்போதும் இந்தியாவிற்கே வெற்றி
Rate this:
Cancel
Gopal - Jakarta,இந்தோனேசியா
15-ஆக-202009:08:59 IST Report Abuse
Gopal சீன ஒரு நய வஞ்சக நாடு. ஒரு போதும் அந்த நாட்டை நம்பக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X