பொது செய்தி

தமிழ்நாடு

பாடகர் எஸ்.பி.பிக்கு மருத்துவ உதவி: தமிழக அரசு அறிவிப்பு

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

சென்னை:பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



latest tamil news




தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனைதொடர்ந்து, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


latest tamil news




இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் செய்தியில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஆக-202005:29:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni கலைவாணித்தாயே நீயே துணை என்றும் அவருக்கு ப்ளீஸ் காப்பாற்றுவாய் அம்மா அவருக்கு உலகமே சங்கீதம் தான் ஓம் ஷக்தி பராசக்தி என்று வேண்டுகிறேன் அவர் மனைவி சாவித்திரியும் பூரணகுணம் பெறவேண்டும்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
15-ஆக-202015:46:27 IST Report Abuse
vnatarajan அந்த சங்கராபரணம் இன்னும் எப்போதும் என்னுடைய மனதில் ரீங்காரம் பாடிக்கொண்டுயிருக்கிறது. சீக்கிரமே அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X