பொது செய்தி

தமிழ்நாடு

பாலு எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன்: இளையராஜா உருக்கம்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: பாலு எழுந்துவா உனக்காக காத்திருக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி, மீண்டு வர வேண்டும் என, பலரும் வேண்டியுள்ளனர்.இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில்,
Ilayaraja, Ilayaraja s p Balasubrahmanyam, SP Balasubrahmanyam, SP Balasubrahmanyam coronavirus, covid 19, பாலு எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன்: இளையராஜா உருக்கமான வீடியோ

சென்னை: பாலு எழுந்துவா உனக்காக காத்திருக்கிறேன் என இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி, மீண்டு வர வேண்டும் என, பலரும் வேண்டியுள்ளனர்.இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில்,


latest tamil newsநமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவதும் அல்ல, சினிமாவுடன் தொடங்கியதும் அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நமது வாழ்வாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்தது. அந்த கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பும் இசையும் பிரிந்ததில்லை.எப்படி ஸ்வரங்கள் பிரியாது இருக்கிறதோ அது போல நமது நட்பும் எந்த காலத்திலும் பிரிந்ததில்லை. நாம் சண்டை பேட்டாலும் சண்டையில்லாத போதும் அது நட்பே என நீயும் அறிவாய், நானும் அறிவேன். நீ நிச்சயமாக திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா.. என பேசியுள்ளார்.எஸ்.பி.பி., நலம் பெற வேண்டுங்கள்: ரஹ்மான்


:கொரோனாவில் இருந்து, எஸ்.பி.பி., மீண்டு வர வேண்டும் என, திரையுலகினர் இறைவனை வேண்டியுள்ளனர்.
இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், 'டுவிட்டர்' பக்கத்தில், 'இசைப் பிரியர்கள் அனைவரும், எஸ்.பி.பி.,க்காக வேண்டிக் கொள்ளுங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.இசையமைப்பாளர்கள் அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், ரஜினி மகள் சவுந்தர்யா உள்ளிட்ட பலரும், எஸ்.பி.பி., மீண்டு வர வேண்டும் என, இறைவனை வேண்டியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-ஆக-202013:28:24 IST Report Abuse
Rafi பொது மேடையில் இசை அமைப்பாளர்களை விட பாடகர்கள் முன்னிலை பெறுவார்கள். SBB அவர்கள் பொது மேடையில் அவர் பாடிய பாடல்களையே இவர் இசை அமைத்திருந்தார் என்ற காரணம் காட்டி இவர் இசை அமைத்த பாடல்களை பாடவிடாமல் முட்டுக்கட்டை கொடுத்தது தான் நினைவில் இருக்கின்றது. எப்படியோ உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர் கருத்து கொண்டவர்களின் ஆறுதல்கள் உள்ளத்திற்கு மிகப்பெரும் பலத்தை கொடுக்கும். விரைவில் குணம் அடைந்திட வாழ்த்துகின்றேன். SBB & ILAIYARAAJA கூட்டணி மக்களை அதிகம் கவர்ந்தது என்பதை நினைவில் கொண்டு இருவரும் மீண்டும் வேற்றுமையை மறந்து இணைந்து செயல்பட வாழ்த்துகின்றேன்.
Rate this:
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
15-ஆக-202014:35:10 IST Report Abuse
Selvaraj Thiroomal ராஜாவிற்கு தானே ஏற்படுத்தி கொண்டுள்ள அவப்பெயருக்கு எந்த வீடியோவும் நேர் செய்யப்போவதில்லை. ஓய்வுகால வாழ்க்கையை எவருக்கும் சிறு காயமும் ஏற்படுத்தாவண்ணம் இருப்பது ஞானியான இவர் அறியாததா"?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
15-ஆக-202013:08:38 IST Report Abuse
அறவோன் இந்த ராசா எப்படிப்பட்ட நபர் என்று உலகறியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X