பொது செய்தி

இந்தியா

பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை

Added : ஆக 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Pranab Mukherjee, Pranab Mukherjee coronavirus, Pranab Mukherjee health, பிரணாப் உடல்நிலை: முன்னேற்றமும் இல்லை

புதுடில்லி :'முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, 10ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில், ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது.


latest tamil newsஉடனடியாக அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. 'தீவிர சிகிச்சை பிரிவில், 'வென்டிலேட்டர்' உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை சீராக உள்ளன' என கூறப்பட்டு உள்ளது.இது குறித்து, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, டுவிட்டரில், 'என் தந்தை, கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அவரின் உடல்நிலை மோசமடையவில்லை.'வெளிச்சம் பட்டால், அவர் கண்களை சுருக்கி கொள்கிறார். அதில் சிறிய முன்னேற்றம் தென்படுகிறது' என, பதிவிட்டு உள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஆக-202013:49:10 IST Report Abuse
Ganesan Madurai மோதி தலித்துகளை ஒதுக்க நினைத்தால் ஒரு தலித் இன்று ஜனாதிபதியாக இருந்திருக்க முடியாது. ஒரு முஸ்லிம் அறிஞரான அப்துல் கலாமை இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ஆக்க பாஜாகா முயன்றது. ஆனால் திருட்டு திராவிட கழகமும் களவாணி கான்கிரஸ் கட்சியும் அதை தடுத்தைப் பற்றி பல முறை எழுத வேண்டியிருக்கும்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-ஆக-202012:32:13 IST Report Abuse
M.COM.N.K.K. ஒரு பச்சை தமிழன் மீண்டும் ஜனாதிபதியாக ஆகக்கூடாது என்று பல தமிழின துரோகிகளே எதிர்த்தார்கள் இதை எப்படி ஒதுக்குவது. இதுவெல்லாம் எதை காட்டுகிறது என்றால் சுய லாபமே
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
15-ஆக-202011:08:29 IST Report Abuse
Pats பி. வி. நரஸிம்ஹ ராவ்-க்கு அடுத்து காங்ரஸ் கட்சியின் பிரதான ட்ரபுள் ஷூட்டராக வலம் வந்தவர் பிரணாப் முகர்ஜி. சோனியா காந்தி குடும்பம் முன்னாள் பிரதமர் பி. வி. நரஸிம்ஹ ராவ் ஒரு தெலுங்கர் என்பதால் ஒதுக்கித் தள்ளியது போல, முன்னாள் ராஷ்டிரபதி பிரணாப் முகர்ஜி-யை ஒரு பெங்காலி என்பதால் ஒதுக்கித் தள்ளியது. 1951-ல் இந்தியாவின் முதல் ராஷ்டிரபதியாக பதவிவகித்த ராஜேந்திர பிரசாத் ஒரு பிஹாரி என்பதால் முன்னாள் பிரதமர் நேரு அவரை ஒதுக்கித் தள்ளினார். தமிழக முதல்வராக இருந்த, கல்வித்தந்தை, கர்மவீரர் காமராஜ் அவர்களை ஒரு தமிழர் என்பதால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒதுக்கித் தள்ளினார். அதேபோல நாளை ராகுல்/ப்ரியங்கா கூட்டணி பி. சிதம்பரம் ஒரு தமிழர் என்பதால் ஒதுக்கித் தள்ளும். இத்தாலிய, இஸ்லாமிய கலப்பின கூட்டணி காங்ரஸ்-ல் அதிகாரம் செலுத்தும் வரை இந்த நிலை தொடரும்.
Rate this:
Raj - nellai,இந்தியா
15-ஆக-202012:34:40 IST Report Abuse
Rajதற்போதைய ஜனாதிபதி ஒரு தலித் என்பதால் ஒதுக்கித் தள்ளுது மோடி அரசு சரிதானே...
Rate this:
santha kumar - ruwi,ஓமன்
15-ஆக-202014:03:27 IST Report Abuse
santha kumarநரசிம்மராவை யார் ஒதுக்கியது. இந்தியாவில் எப்படி சுதந்திரிற்கு முன் பின் என பார்க்கலாமா அதே போல் பொருளாதாரத்தில் ராவின் ஆட்சிக்கு முன் பின் என பார்க்கலாம்.மிக பெரிய சீர்திருத்தம் துணிச்சலாக கொண்டுவந்தவர். மீண்டும் நேரு குடும்பம் வேறு வலி இல்லாமல் வந்தது. சிதம்பரத்தையை யார் ஒதுக்கியது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X