பொது செய்தி

இந்தியா

தேசிய கொடியை ஏற்றி வைத்து மோடி மரியாதை

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று(ஆக.,15) டில்லி செங்கோட்டையில் நடந்த விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டு எளிய முறையில் நடைபெற்றது. முக்கிய விவிஐபி.,க்கள் 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டன. அனைத்து நுழைவு வாயில்களிலும், தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. 7வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பானது



latest tamil news





காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி



முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் செங்கோட்டையின் லாகூர் கேட்டிற்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வந்த பிரதமர் மோடியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு செயலர் அஜய்குமார் வரவேற்றனர். முப்படைகள் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார்.,


latest tamil news





பலத்த பாதுகாப்பு:



பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news





latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Magadevayar Sp - karaikal,இந்தியா
16-ஆக-202000:09:03 IST Report Abuse
Magadevayar Sp சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் . சுதந்திரத்தை காப்போம் . இந்தியா அனைத்திலும் வல்ல , நல்ல அரசாக வளர்ச்சி பெற பிராத்திப்போம்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
15-ஆக-202008:46:49 IST Report Abuse
M.COM.N.K.K. அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களை தினமலர் வாசகர்கள் சார்பாகவும் தினமலர் ஊழியர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த சுதந்திரத்தினத்தில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால் அனைவரும் நாடென்ன செய்தது நமக்கு என்று கேட்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று நினைத்தால் அதுவே நமக்கு வெற்றி.அனைவரும் இதை ஏற்றுக்கொண்டு நம் நாட்டை வெற்றி நடை போடவைப்போம் இதுவே நாம் பெற்ற சுதந்திரத்திற்கு வெற்றி ஆகும்.
Rate this:
Cancel
TT. KUMAR -  ( Posted via: Dinamalar Android App )
15-ஆக-202008:27:12 IST Report Abuse
TT. KUMAR பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X