பொது செய்தி

இந்தியா

எதிரி நாடுகளின் சதி முறியடிப்பு: எல்லைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன- மோடி

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Happy 74th Independence, pm modi, modi speech, India, Independence Day, I Day 2020, காஷ்மீர், பெண்கள், எல்லைகள், சதி, எதிரி, பிரதமர் மோடி, நரேந்திர மோடி,

புதுடில்லி: எதிரி நாடுகளின் சதி முறியடிக்கப்பட்டதுடன், இந்திய எல்லைகள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பெண்களுக்கு வாய்ப்பு


டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசியதாவது: பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.முப்படைகளிலும் நிரந்தரமாக பணியாற்றும் வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கி கடன் திட்டம் மூலம் 70 சதவீத பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்ச திருமண வயது

பெண்களுக்கு, குறைந்த பட்ச திருமண வயதை நிர்ணயம் செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அறிக்கை அளித்தஉடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நாட்டை பலப்படுத்துவதுடன், பெருமையடைய செய்கின்றனர். சுயவேலைவாய்ப்பு முதல் வேலைவாய்ப்பு வரை, தேசம் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கியுள்ளது. இன்று பெண்கள் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கின்றனர். அவர்கள் விமான ஓட்டிகளாக வானத்தை தொட்டுவிட்டனர்.
1,000 நாட்களில்

நமது 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நம்மிடம் 1,300 தீவுகள் உள்ளன. புவியியல் அமைப்புகளை மனதில் வைத்தும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்குகெடுக்கவும், அங்கு புதிய திட்டங்கள் நடந்து வருகின்றன. அதிவேக வளர்ச்சிக்கு சில தீவுகளை தேர்வு செய்துள்ளோம். சமீபத்தில் அந்தமான் நிகோபார் தீவுகள், கடலுக்கடியில் அமைக்கப்பட்ட கேபிள் மூலம் இணைக்கப்பட்டது. அடுத்து 1,000 நாட்களில் லட்சத்தீவுகளும் இணைக்கப்படும்.


ஆன்லைன் பரிவர்த்தனை

கொரோனா காலத்தில் ஆன்லைன் பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது. பீம் செயலி மூலம் பல லட்சம் கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளது. வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாய கடன்களை எளிதாக வழங்க முடியும். ரூ 1.10 லட்சம் கோடி செலவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது


கொரோனா தடுப்பூசி


நாள்தோறும் சராசரியாக 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான பரிசோதனைகள் நடந்து வருகிறது.இன்று இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. விஞ்ஞானிகள் பச்சைக்கொடி காட்டியதுடன், அவை அதிகளவு உற்பத்தி செய்யப்படும்.


விரைவில் தேர்தல்


காஷ்மீரில் தொகுதி மறுவரையறை பணிகள் நடக்கிறது. இது முடிந்ததும், அங்கு தேர்தல் நடத்தப்படும், காஷ்மீருக்கு சொந்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இருப்பார்கள். இதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கடந்த ஒராண்டில், காஷ்மீரில் வளர்ச்சிக்கான புதிய பாதை துவங்கியுள்ளது. இந்த ஒராண்டில் தான், அங்கு பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை கிடைத்துள்ளது. அகதிகளின் பெருமை நிலைநாட்டப்பட்டுள்ளது. காஷ்மீர் , லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியின் பலன்கள் காஷ்மீர் மக்களுக்கு கிடைத்து வருகிறது.
latest tamil newsசூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. டால்பின்களை பாதுகாக்க புதிய திட்டம் துவங்கப்படும். சுற்றுச்சூழல் மாசை குறைக்கும் வகையில் 100 நகரங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது


வீரர்களுக்கு நன்றி


இந்தியாவுக்கு எதிராக எதிரி நாடுகள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இறையாண்மையை காக்க கடுமையாக பணியாற்ற வேண்டும். இந்தியாவின் வெற்றிக்கு தைரியத்துடன் செயல்பட்ட வீரர்களே காரணம். இந்திய எல்லைகளை பாதுகாக்க தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி. லடாக் பிரச்னையில் எதிரிகளின் சதி முறியடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவுக்கான ஆதரவு அதிகரிப்பு. இந்திய எல்லைகள் அனைத்தும் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

நமது எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, அதன் இறையாண்மையை காப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து எல்லைக்கோடு வரை, நமது எதிரிகளுக்கு, உரிய முறையில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. லடாக்கில் நமது வீரர்கள் செய்த பணியை உலகம் பார்த்துள்ளது. நமது நாட்டின் இறையாண்மையே, நமக்கு உயர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஆக-202019:36:58 IST Report Abuse
தமிழ்வேல் அதெப்படி வங்கிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாய கடன்களை எளிதாக வழங்க முடியும்?
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
15-ஆக-202019:07:32 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் தான் காரணம்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஆக-202019:31:43 IST Report Abuse
தமிழ்வேல் நேரு.......
Rate this:
Cancel
15-ஆக-202018:46:42 IST Report Abuse
ஆப்பு எதிரிகள் நாட்டிலிருந்து இறக்குமதி தொடர்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X