பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் விரைவில் பொருளாதார இயல்பு நிலை: முதல்வர் இபிஎஸ்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
India, Independence Day, I Day 2020, tamil nadu, tn news, TN CM, சுதந்திரதினம், முதல்வர், பேச்சு, கொரோனா, செலவு, நீட் தேர்வு, இபிஎஸ்

சென்னை: விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும் என முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று (ஆக.,15) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்திறங்கிய முதல்வர் இபிஎஸ் தேசியக் கொடி ஏற்றினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
* 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன்.
* மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான், மக்களிடம் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
* அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்.
* சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
* கொரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம்.

* நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
* கொரோனாவுக்கு சித்தமருத்துவ சிகிச்சை முறையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


* தமிழக அரசு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வெல்லும் என்பதை உறுதிபட கூறுகிறேன்.
* தமிழக அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கொரோனா தடுப்பு பணிக்கு ரூ6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடுவாழ் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
* 4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பத்திரமாக தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
* சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்
* வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்
* சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும்.
* அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கொரோனா தொற்றை எதிர்கொள்ள 1,29,000 படுக்கைகள் தயாராக உள்ளன.
* கொரோனாவை எதிர்கொள்ள 1800 மருத்துவர்கள், 7 ஆயிரம் செவிலியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
* 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
* விரைவில் பொருளாதார இயல்பு நிலையை தமிழகம் எட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
15-ஆக-202016:24:38 IST Report Abuse
Rajan அடுத்த வருடம் சூசை கொடி ஏற்றுவார்
Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
15-ஆக-202019:41:32 IST Report Abuse
Kadaparai Maniதிமுக அலுவலத்தில் சூசை அடுத்த வருடம் கொடி ஏற்றுவார்...
Rate this:
Cancel
15-ஆக-202016:19:57 IST Report Abuse
தமிழ் 2022 வரை ஊரடங்கு அமல்படுத்துங்க. பொருளாதாரம் பிச்சிக்கிட்டு போகும்.
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
15-ஆக-202014:35:16 IST Report Abuse
A.Gomathinayagam இ பாஸ் முறையை ஒழித்து ,சாலை, ரயில் போக்குவரத்தை மக்கள் உபயோகத்திற்கு கொண்டு வந்தால் தான் பொருளாதாரம் மீளும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X