அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் குழப்பமா ? முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் தனித்தனியாக அமைச்சர்கள் ஆலோசனை

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் அமைச்சர்கள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். முதல்வர் வேட்பாளர் யார் ?தமிழகத்தில் இ.பி.எஸ் முதலமைச்சராகவும், ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இன்னும் சில
AIADMK, tamil nadu CM, tn cm Candidate, deputy cm OPS, அதிமுக, முதல்வர், வேட்பாளர், ஓபிஎஸ், அமைச்சர்கள், ஆலோசனை

சென்னை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் அமைச்சர்கள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.


முதல்வர் வேட்பாளர் யார் ?



தமிழகத்தில் இ.பி.எஸ் முதலமைச்சராகவும், ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் சிலரோ, இபிஎஸ்.,ஐ முன்னிருத்த வேண்டும் எனவும், சிலர் ஓபிஎஸ்.,ஐ முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.


latest tamil news



அமைச்சர்களின் இந்த மாறுபட்ட கருத்துகளால் கட்சிக்குள் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை பூதாகரமானது. இதையடுத்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் கட்சி அறிவிக்கும் எனக்கூறி அமைச்சர் ஜெயக்குமார் முற்றுபுள்ளி வைத்தார்.
இந்நிலையில், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அடுத்த முதல்வராக, நிரந்தர முதல்வராக ஓபிஎஸ் தான் வருவார் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை பெற்ற ஒரே அரசியல் வாரிசு ஓபிஎஸ் தான் என்றும் தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டம் முழுவதும் அதிமுக கட்சி தொண்டர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இதனால் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை மீண்டும் வெடித்தது. பெரியகுளம் வடக்கு அக்ராஹரம் தெருவில் சி எம் ஓபிஎஸ் என்ற போஸ்டரை இபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஓ.பி.எஸ் இல்லத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லம் அருகே அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள், முதல்வர் இபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையை முடித்த பின்னர், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-202009:17:14 IST Report Abuse
Sampath Kumar இந்த கிளப்பி விட்டுங்கே இதை தானே எதிர் பார்த்தால் பாலகுமாரா நடந்து
Rate this:
Cancel
karthi - chennai,இந்தியா
16-ஆக-202008:31:06 IST Report Abuse
karthi இதில் யார் எங்கள் வீட்டு பிள்ளை ? சாட்டை யார் கையில் உள்ளது
Rate this:
Cancel
Murugan - Puducherry,இந்தியா
15-ஆக-202016:33:02 IST Report Abuse
Murugan ADMK game start
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X