பொது செய்தி

தமிழ்நாடு

தந்தை இறப்பு தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பிற்கு தலைமையேற்ற பெண் இன்ஸ்பெக்டர்

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
independence day, i day 2020, tamil nadu, tamil nadu news, சுதந்திரதினம், அணிவகுப்பு, இன்ஸ்பெக்டர், திருநெல்வேலி, தந்தை இறப்பு, சுதந்திர தினவிழா, போலீஸ் அணிவகுப்பு, தலைமையேற்பு, பெண் இன்ஸ்பெக்டர்,

இந்த செய்தியை கேட்க

திருநெல்வேலி: திருநெல்வேலி வ.உ.சி.,மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா போலீஸ் அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி. இவரது கணவர் பாலமுருகன், திருநெல்வேலி மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றுகிறார். மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி 83, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் வசித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றிரவு 10:00 மணியளவில் காலமானார்.


latest tamil news




இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தந்தை இறப்பு தகவல் நேற்று இரவில் தெரியவந்தது. இருப்பினும் சுதந்திர தின விழா அணிவகுப்பை முன்னின்று நடத்தும் பொறுப்பேற்றிருப்பதால் அவரால் வேறு நபர்களை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. காலையில் கலெக்டர் ஷில்பா கொடியேற்றிவைத்து அணிவகுப்பு முடியும் வரையிலும் அதற்கு தலைமை வகித்த மகேஸ்வரி, விழா முடிந்ததும் அவசர அவசரமாக கண்ணீர் மல்க கிளம்பிச்சென்றார்.

தந்தை இறப்பு என முன்னரே தெரிந்த பிறகும் கூட எந்த மாற்றமும் இன்றி அணிவகுப்பை நடத்திய பிறகே கிளம்பிச்சென்ற மகேஸ்வரியை அதிகாரிகள் பாராட்டினர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jack J - Chennai,இந்தியா
15-ஆக-202020:39:11 IST Report Abuse
Jack J உங்க அப்பாவோட ஆசி எப்போதும் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் அப்போது இருக்கும்.. உங்க அப்பா ஆன்மா ரொம்ப சந்தோசப்படும் .RIP
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் முன்னின்று நடத்தும் பொறுப்பேற்றிருப்பதால் அவரால் வேறு நபர்களை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நிலைமை உணர்ந்து சக அதிகாரிகள் யாரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன்வராதது சோகம் வேளையில் சேர்ந்த இரண்டாம் மாதம் உயரதிகாரி மண்டையில் வெட்டு பட்டார் உடனே போலீஸ் புகார் கொடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதோடு உரியவர் வரும்வரை அலுவலக பொறுப்பை ஏற்றேன்
Rate this:
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
15-ஆக-202017:16:44 IST Report Abuse
Ramesh M என் நாடு என் மக்கள். பெருமைகொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X