பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020
Share
Advertisement
TN,Tamilnadu,rain,தமிழகம்,தமிழ்நாடு,மழை, சென்னை வானிலை மையம், சென்னை வானிலை,

இந்த செய்தியை கேட்க

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை : ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கும், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஒடிசா, வட ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X