சென்னை: சுதந்திரதினத்தை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சியாக சென்னையை சேர்ந்த ஓவியர் ஒருவர் காபி தூளில் மகாத்மா காந்தியின் உருவப்படங்களை வரைந்துள்ளார்.
சென்னையில் உள்ள கிண்டி கத்திப்பாரா அருகே உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக சிவராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். 74வது சுதந்திரதினமான இன்று, கின்னஸ் சாதனை முயற்சியாக 2020 சதுர அடி கொண்ட துணியில் 74 விதமான காந்தியின் உருவங்களை 24 மணி நேரத்தில் வரைந்துள்ளார். முழுக்க முழுக்க காபி தூளை கரைத்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வரையும் இந்த முயற்சி கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் காபி தூள் கரைசலின் மூலம் 1,704 சதுர அடியில் அந்நாட்டு வரைப்படத்தை வரைந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
