சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ராஜு , தேவசகாயம், முத்தரசன், திருநாவுக்கரசர், சீமான், ஜோதிமணி

தமிழகத்தில் எப்பவுமே, 'நம்பர் ஒன்' அ.தி.மு.க., தான். இரண்டாவது இடம் யாருக்கு என்பதில் தான், பா.ஜ., மற்றும் தி.மு.க., இடையே போட்டி நிலவுகிறது.


'இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக், இதுவாகத் தான் இருக்க முடியும்...' என, உறுதியாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி.



ஹரியானாவில், தேவிலால் முதல்வராக இருந்தபோது, அவரின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரியாக இருந்தேன். விருப்ப ஓய்வு பெற்ற நான், சென்னையில் வசித்து வந்தேன். 1989ல், தேவிலால் சென்னை வந்தார். அவரின் நிகழ்ச்சிகளுக்கு நான் தான் மொழிபெயர்ப்பு செய்தேன்; கனிமொழி மொழிபெயர்க்கவில்லை.


'சமூக வலைதளங்களில், கனிமொழி தான் மொழிபெயர்த்தார் என, பிரபலங்கள் கூட, தவறாக பிரசாரம் செய்து வருகின்றனரே... என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், ஐ.ஏ.எஸ்., முன்னாள் அதிகாரி தேவசகாயம்.



தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் இடம்பெற்றிருந்த, பா.ஜ., இப்போது, தங்கள் தலைமையில் தான், அ.தி.மு.க., உள்ளது என்கிறது. பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல, அ.தி.மு.க., சிக்கியுள்ளது.


'கம்யூ.,க்கள், தி.மு.க., என்ற புதைகுழிக்குள் விழுந்து வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர் எனவும் சொல்லலாமா... என, பா.ஜ.,வினர் கேட்கின்றனரே...' என, நெத்தியடியாக சொல்லத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி.



திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,000 பேரில், 1,500க்கும் மேற்பட்டோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். தற்காலிக பணியாளர்கள், 2,000 பேர் நிரந்தர வேலை கேட்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படாமல், வட மாநிலத்தவருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news





'ரயில், வட மாநிலங்களுக்கு ஓடக் கூடியது. ஹிந்தி தெரிந்தால் தான், வேலைக்கு ஆகும். உங்கள் கூட்டணி கட்சிகள் தான், ஹிந்தியை எதிர்க்கின்றனவே; பிறகு எப்படி, தமிழகத்தினருக்கு வேலை கிடைக்கும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., அறிக்கை.



2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும். தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை, தற்போதைய ஏழு ஆண்டுகளில் இருந்து ஆயுட்காலமாக உயர்த்த வேண்டும்.


'ஏழு ஆண்டுகளாக, இவர்களுக்கு பணியிடம் வழங்கப்படவில்லையா; அப்போ, எதற்கு தேர்வு நடத்தினர்...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



தமிழகத்தை பொறுத்தவரை தாமரை மலரும் என்ற பேச்சுக்கே இடமில்லை; இங்கு ஒரு போதும் தாமரை மலராது.


'தனித்து நின்றால், உங்கள் காங்கிரஸ் கால் ஆட்டம் கண்டு விடும்; 'கை' நடுக்கம் வந்து விடும் என்கின்றனரே, தாமரை கட்சியினர்...' என, கிண்டலாக நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், கரூர், காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
15-ஆக-202019:40:18 IST Report Abuse
கல்யாணராமன் சு. பொன்மலை பணிமனையில் வேலை செய்வதற்கு எதற்கு ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும்? ............
Rate this:
Cancel
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) அப்ப... சுடலை பேசுவதெல்லாம் உங்களுக்கு ஜோக்காகவே தெரியவில்லையா??
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஆக-202018:18:12 IST Report Abuse
Endrum Indian எனக்கு ஒன்றும் தவறாகத்தெரியவில்லை, கொஞ்சம் கொஞ்சமா காற்று போன பலூன் மாதிரி ஆகி விட்டது தி மு க. பி ஜெ பி யா தி மு க வா டாஸ்மாக்கினாட்டில் என்று சொன்னால் தி மு கவை இதை விட கேவலமாக யாரும் சொல்ல முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X