பொது செய்தி

இந்தியா

'சீனாவின் பெயரை உச்சரிக்க அச்சம் ஏன்?' காங்., விமர்சனம்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement

புதுடில்லி: சுதந்திர தின உரையில், 'எதிரிகளுக்கு தக்க பதிலடி தரப்பட்டுள்ளது' என, பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், 'சீனாவின் பெயரை ஆட்சியாளர்கள் குறிப்பிட அஞ்சுவது ஏன்' என, காங்., கேள்வி எழுப்பியுள்ளது.


latest tamil news




நாடு முழுவதும் இன்று, 74வது சுதந்திர விழா கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையில் கொடியேற்றியபின், 90 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார் மோடி. அதில், சீனா மற்றும் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல், 'எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து, நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரை இந்தியாவுடன் மோத நினைத்தவர்களுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியில் நமது வீரர்கள் தக்க பதிலடி தந்துள்ளனர்' என்றார்.



latest tamil news



இதைச் சுட்டிக்காட்டி காங்., தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளதாவது:

இந்திய ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் குறித்து, 130 கோடி இந்தியர்களும், காங்., தொண்டர்களும் பெருமைப்படுகிறோம். நம் மீதான தாக்குதல்களுக்கு அவர்கள் தக்க பதிலடி வழங்கியுள்ளனர். ஆனால், சீனாவின் பெயரை உச்சரிக்க நம் ஆட்சியாளர்கள் அஞ்சுவது ஏன்? என, யோசிக்க வேண்டும். இன்று நமது பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. சீன படைகளை எவ்வாறு பின்னுக்கு தள்ளி நமது பிராந்திய ஒருமைப்பாட்டை எவ்வாறு பாதுகாக்க போகிறீர்கள் என அரசிடம் கேட்க வேண்டும்.


latest tamil news



நேரு, வல்லபாய் படேல் மற்றும் பிற சுதந்திர போராட்ட வீரர்களால் அமைக்கப்பட்ட 'தன்னிறைவு' திட்டம் பற்றி பேசுபவர்கள், 32 பொதுத் துறை நிறுவனங்களை விற்றுள்ளனர். ரயில்வேயையும், விமான நிலையங்களையும் தனியாரின் கைகளுக்கு தந்துள்ளனர். தற்போது எல்.ஐ.சி., மற்றும் எப்.சி.ஐ.,யை தாக்கியுள்ளனர். இவர்கள் இந்நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பார்களா என கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
16-ஆக-202008:07:25 IST Report Abuse
natarajan s ஒரு பழமொழி உண்டு " IF YOU WANT TO INSULT A PERSON JUST IGNORE HIM " அதுதான் இங்கும் கடை பிடிக்கப்பட்டுள்ளது . சரி திரு மோடி சீனா என்று பெயரை குறிப்பிட்டால் நீங்கள் பாகிஸ்தான் பெயரை ஏன் சொல்லவில்லை என்று கேட்பீர்கள் , அப்புறம் நேபாளம் பற்றி ஏன் பேசவில்லை என்பீர்கள்.நீங்கள் மீண்டும் பதவிக்கு வந்த பின் இதுபற்றியெல்லாம் பேசுங்கள்.
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
16-ஆக-202002:01:34 IST Report Abuse
Dr.C.S.Rangarajan 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்பதை கருத்தில் கொண்டு இந்திய அரசு எதனை செய்யவேண்டுமோ அதனை செய்தது 'உள்ளங்கை நெல்லிக்கனி'போல் யாவரும் அறிந்ததே. இந்திய அரசு அஞ்சுவதாக காங்கிரஸ் நினைத்தால் சீனாவின் பெயரை குறிப்பிட்டு அவர்களை வன்மையாக காங்கிரஸ் சாடக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லையே? பிஜேபி அரசு செய்யதவறியதால், காங்கிரஸ் ஆகிய நாங்கள் 'தகாத வார்த்தைகளை பிரயோகித்து' சீனாவை வசை பாடுகிறோம் என கூறலாமே
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
16-ஆக-202001:44:15 IST Report Abuse
Dr.C.S.Rangarajan சீனாவின் பெயரை 'ஒருநாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்கவேண்டும் ஜென்மம் கடைத்தேற' என்பதுபோல் காங்கிரஸ் கட்சி சீனாவுடன் ரகசிய ஒப்பந்தத்துக்குப்பின் 'துதி பாடிக்கொண்டிருப்பது' ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்மை பயக்கும். நாடு எக்கேடு கெட்டாலென்ன? காங்கிரஸ் 'கண்ணுக்கு தெரியாமல்' போவது உறுதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X