பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2.72 லட்சமாக உயர்வு

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,15) ஒரே நாளில் 5,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.72 லட்சத்தை தாண்டியது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,830 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 30 பேர். இதனால்
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,15) ஒரே நாளில் 5,236 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.72 லட்சத்தை தாண்டியது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,830 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 30 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 135 ஆய்வகங்கள் (அரசு-62 மற்றும் தனியார்-73) மூலமாக, இன்று மட்டும் 71,343 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 36 லட்சத்து 40 ஆயிரத்து 796 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,509 பேர் ஆண்கள், 2,351 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,00,253 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,31,823 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 127 பேர் உயிரிழந்தனர். அதில், 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,641 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,213 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 16 ஆயிரத்து 115 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 039 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 41 ஆயிரத்து 951 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
16-ஆக-202015:18:40 IST Report Abuse
sundarsvpr கொரானாவிற்கு மருந்து இல்லாத நிலையில் குணம் அடைந்தார்கள் என்ற லாஜிக் புரியாத புதிர். நோய் எதிர்ப்பு சக்தி காரணமாய் இருக்கலாம். இறப்பிற்கு காரணம் தோற்று முற்றிய நிலையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதால். முக கவசம் இடைவெளி கைகால் சுத்தம் செய்தல்தான் அதிகம் சொல்லப் படுகிறது. என்ன என்ன உணவுவகை தவிர்த்தல் என்பது பிரகாசப்படுத்தப்படவில்லை? அதிகாலையில் எழுந்து இரவு உறங்க செல்லும் வரை எவ்வாறு உட்காருவது எவ்வாறு குளிப்பது போன்றவை எல்லா மத வாழ்க்கை நெறி உள்ளன. அதனைஏன் பிரகாசப்படுத்தக்கூடாது? குதிகால் போட்டு பல் தேய்ப்பார்கள். நீர்நிலையில் குளிக்கும்போது கால் உடல் கடைசியில் தலைக்கு தண்ணீர் விடுவார்கள். வருங்கால சந்ததினர்களுக்கு வாழ்க்கை நெறி பற்றி முதல் வகுப்பிலிருந்து போதிக்கவேண்டும்.
Rate this:
Cancel
SIVA AGORA SAKTHIVEL MURUGAN - MEKELLE,எத்தியோப்பியா
16-ஆக-202012:39:08 IST Report Abuse
SIVA AGORA SAKTHIVEL MURUGAN Discharge with corona positive only more. Discharged all peoples not negative. After 10days from first Covid they are going to discharge with corona virus. May be they also going spread to other peoples. Who are going negative only government allow to go out from home. Its my request.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
16-ஆக-202008:15:49 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாட்டில் வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு 127 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..R.Kumaresan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X