பொது செய்தி

இந்தியா

ம.பி., தலைநகர் போபாலில் 25 அடி உயர பாரத மாதா வெண்கல சிலை திறப்பு

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
bharatha matha, statue, bronze, bhopal, mp, Madhya Pradesh, CM Shivraj Singh Chouhan, Bharat Mata, Shaurya Smarak, Bhopal, பாரத மாதா, வெண்கல சிலை, 37 அடி உயரமம், திறப்பு, மாநில முதல்வர், போபால்

போபால்: ம.பி., தலைநகர் போபாலில் 25 அடி உயரம் கொண்ட பாரத மாதா வெண்கல சிலையை மாநில முதல்வர் திறந்து இன்று (ஆக.,15) வைத்தார்.

நாட்டின் 74வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ம.பி., தலைநகர் போபாலில் மாநில முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் 25 அடி உயரம் கொண்ட பாரத மாதா வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

போபாலில் உள்ள போர்வீரர்கள் நினைவிடமான சவுர்யாவில் தாமரை மலர் மீது கையில் தேசிய கொடியுடன் நிற்பது போன்று பாரதமாதா சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் அசோக சக்கரம், தேசிய கீதம், தேசிய முழக்கம் போன்றவை இடம் பெற்றுள்ளன.


latest tamil news



சிலை திறப்பு நிகழ்ச்சியின் போது மாநில அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், உயர் அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் மலர் தூவி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பாரத மாதா சிலையை திறந்து வைத்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நீண்ட நாளைய கனவு நனவாகி உள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lakshmipathi S - Bangalore,இந்தியா
16-ஆக-202008:41:50 IST Report Abuse
Lakshmipathi S தமிழ்நாட்டிலும் இதுபோல் சிலை வேண்டும். வேண்டாத சிலைகளை அகற்றலாம்.
Rate this:
Cancel
Lakshmipathi S - Bangalore,இந்தியா
16-ஆக-202008:39:36 IST Report Abuse
Lakshmipathi S tamil
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X