பொது செய்தி

இந்தியா

ரசிகர்கள் அன்புக்கு நன்றி! உருக்கமாக விடைபெற்ற தோனி

Updated : ஆக 16, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Indian crickete,r Mahendra Singh Dhoni, announces retirement from international cricket.


சென்னை, 'தல' தோனி இருக்கிறார்... எப்படியும் அணியை கரை சேர்ப்பார்' என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு போட்டியையும் பார்த்த இந்தியரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தி. நேற்று இரவு 7:29 மணிக்கு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்தார்.இந்திய கிரிக்கெட் அரங்கில் தோனி நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். தலைவன் என்பதற்கு தகுதியானவராக திகழ்ந்தார்.


விடைபெற்றார் 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனி; சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

latest tamil newsமூன்று உலக கோப்பைகள் வென்று வரலாறு படைத்தார். வித்தியாசமான வியூகம், களத்தில் 'கூலான' அணுகுமுறையால் வியக்க வைத்தார். 2007, 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் சற்றும் எதிர்பாராமல் ஜோகிந்தர் சர்மாவை பந்துவீச செய்து, சாம்பியன் கனவை நனவாக்கினார். 2011, உலக கோப்பை பைனலில் யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கி 'சிக்சர்' அடித்து கோப்பை பெற்று தந்தார்.சிறந்த 'பினிஷரான' இவரது 'ஹெலிகாப்டர் ஷாட்'என்றும் மறக்க முடியாதது. இந்தியாவில் மட்டும் அல்லாமல் அன்னிய மண்ணிலும் வெற்றிக் கொடி நாட்டினார்.

இவரது ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொள்ளாமல் எதிரணிகள் திணறின.சக வீரர்களுக்கு பக்கபலமாக இருந்து, அவர்களது வளர்ச்சிக்கு வித்திட்டார். இளம் தலைமுறைக்கு சிறந்த 'ரோல்-மாடலாக' விளங்கினார்.'உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' என ரத்தின சுருக்கமாக ஓய்வை அறிவித்து விட்டார் தோனி. அவர்களது கோடிக்கணக்கானரசிகர்களோ வார்த்தைகளின்றி சோகத்தில்மூழ்கியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
15-ஆக-202023:45:16 IST Report Abuse
Rajan Aravon எனும் மூர்க்கன் புலம்பல், டோனி முன்னாடி சொன்ன யாரும் ஒண்ணுமே இல்லை
Rate this:
Cancel
Poovannan - Villupuram,இந்தியா
15-ஆக-202022:23:23 IST Report Abuse
Poovannan உலகம் ஒரு வட்டம் இன்று நாம் செய்யும் ஒரு நன்மையும் தீமையும் நமக்கு ஒரு நாள் வந்தே தீரும் இது உலக நியதி அன்று ஒரு வெற்றிகரமான கேப்டன் கங்குலியை நாம் எப்படி அனுப்பினோமோ அது இன்று தோனிக்கு நடந்துள்ளது இன்று கங்குலி இந்திய கிரிக்கெடை கையில் வைத்துள்ளார் தோனிக்கு இது தான் நடக்கும் என நான் முன்பே யூகித்தேன் ரஜினி படத்தின் ஒரு பாடல் ஞாபகம் வருகின்றது நன்மை ஒன்று செய்திர்கள் நன்மை விளைந்தது தீமை ஒன்று செய்திர்கள் தீமை விளைந்தது
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
15-ஆக-202021:46:09 IST Report Abuse
Veeramani Shankar All the best Mr.M.s.Dhoni.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X