பொது செய்தி

இந்தியா

தெலுங்கானாவின் நிலைமையை கண்காணிக்க முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்

Updated : ஆக 15, 2020 | Added : ஆக 15, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் மழை பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவும், மாநிலத்தின் நிலைமையை கண்காணிக்கவும் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



latest tamil news



தெலுங்கானாவில் தற்போது பரவலாக தென் மேற்கு பருவழை தீவிரமடைந்து வருகிறது. மழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உள்ளது. இது தொடர்பாக பிரகதிபவனில் முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாவட்டத்தின் நிலைமைகளை கண்காணிக்குமாறும் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக முதல்வர் ராவ் கூறுகையில், மாநிலத்தின் மழை பொழிவால் அனைத்து அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசார் அனைவரும் அந்தந்த மாவட்டங்களின் நிலைமையை கண்காணிக்க வேண்டும். கள நிலைமைகளை மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் நிலைமைகளை கண்காணிக்க ஐதராபாத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகளை அமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒரு பாதுகாப்பு இடைநிலை உட்பட இரண்டு ஹெலிகாப்டர்களை சேவையில் ஈடுபடுத்தியது. மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் நடவடிக்கைக்கு தயாராக உள்ளன.


latest tamil news



மாவட்ட வாரியாக நிலைமைகளை பகுப்பாய்வு செய்ததில், தெலுங்கானாவின் பல்வேறு முக்கிய அணைகள் மற்றும் நீரோடைகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது. அபாய காலகட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். குறிப்பாக வாரங்கல் மற்றும் கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதேபோல், பல இடங்களில் நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளில் வடிகால் கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் அங்கு வெள்ள அபாயம் ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X