அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் திமுகவில் இருக்க முடியாது: எச்.ராஜா

Added : ஆக 16, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement
காரைக்குடி; 'சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது. தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம்' என பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது:தி.மு.க., மூழ்குகின்ற கப்பல். இதைத்தான் அழகிரி கூறியுள்ளார். சுயமரியாதை உள்ளவர்கள், கவுரவமானவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதிக்கு சலாம் போடுபவர்கள்
சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் திமுகவில் இருக்க முடியாது: எச்.ராஜா

காரைக்குடி; 'சுயமரியாதை, கவுரவம் உள்ளவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது. தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம்' என பா.ஜ.,தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் கூறியதாவது:தி.மு.க., மூழ்குகின்ற கப்பல். இதைத்தான் அழகிரி கூறியுள்ளார். சுயமரியாதை உள்ளவர்கள், கவுரவமானவர்கள் தி.மு.க.,வில் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதிக்கு சலாம் போடுபவர்கள் தான் தி.மு.க.,வில் இருக்க முடியும்.சுயமரியாதை உள்ளவர்கள் அந்த கட்சியில் இருக்காதீர்கள்.

சுயமரியாதையோடு, தேசபக்தியோடு வாருங்கள் ஒன்றிணைவோம் என்று அவர்களை அழைக்கிறேன்.பன்மொழித் தன்மையை பராமரிக்கும் விதத்தில் தேசிய கல்வி கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் சர்வாதிகார தன்மை கொண்டவர்கள்.விநாயக சதுர்த்தி விழா சமுதாய ஒற்றுமை விழாவாக கொண்டாப்படுகிறது. இதற்கு அரசு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. மதுரை ஆவணிமூலத் திருவிழாவிற்கு இணை ஆணையர் தடை விதித்துள்ளார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் கையில் கோயில்கள் இருக்கும் வரை ஹிந்துக்கள் சுதந்திரமாக மத உரிமையை கடைப்பிடிக்க முடியாது.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hussain Mohamed - Chennai,இந்தியா
17-ஆக-202014:17:38 IST Report Abuse
Hussain Mohamed முதலில் உன் கட்சி தமிழகத்தில் எங்கே என்று தேடிப்பார்.
Rate this:
Cancel
Lakshminarayanan Krishna Iyengar - mumbai,இந்தியா
16-ஆக-202020:23:00 IST Report Abuse
Lakshminarayanan Krishna Iyengar சூரிய தேவி சென்னை,ஜீவஜோதி திருவாரூர், வித்யா ராணி சேலம்,வாவ் பிக் பிக் லீடர்ஸ்,தன் பிஜேபி பிக் party
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
16-ஆக-202020:08:18 IST Report Abuse
M.Selvam சுயமரியாதை கௌரவம் இதெல்லாம் உள்ளோர் எந்த கட்சியிலும் இருக்கவே முடியாது.. இதில் என்ன கட்சி வேறுபாடு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X