சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1.50 கோடி 'குட்கா' பறிமுதல் வழக்கு

Added : ஆக 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கடலுார் : கடலுாரில், ரூ.1.50 கோடி மதிப்பிலான 'குட்கா' பொருட்களை வீட்டில் பதுக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான மளிகைக் கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 7 வகையான 10 டன் எடையுள்ள 'குட்கா' பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில்

கடலுார் : கடலுாரில், ரூ.1.50 கோடி மதிப்பிலான 'குட்கா' பொருட்களை வீட்டில் பதுக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான மளிகைக் கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள வீட்டில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 7 வகையான 10 டன் எடையுள்ள 'குட்கா' பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை டி.எஸ்.பி., சாந்தி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.போலீஸ் விசாரணையில், போடி செட்டித் தெருவைச் சேர்ந்த பாரதி என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், கடலுாரில் பதுங்கியிருந்த பாரதி 36; யை நேற்று, பிடித்து விசாரித்தனர்.

போடி செட்டித் தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் அவர், 6 மாதமாக பெங்களூருவில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில் காய்கறிகளை கொண்டு வருவது போல் 'குட்கா' பொருட்களை ஏற்றி வந்து, கே.என்.பேட்டை திருப்பதி நகர் வாடகை வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். இவர், சொந்த ஊரான பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் அண்ணாநகரில் இருந்து கடலுார் கே.என். பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கிருந்து, கடலுார் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் 'குட்கா' பொருட்களை விற்றதை ஒப்புக் கொண்டதால் அவரை கைது செய்தனர்.

அவர், கொடுத்த தகவலின் பேரில், அவரது குடோனில் பணிபுரிந்த திருப்பாதிரிப் புலியூர் சரவணன், 49; சாவடி கேசவன் மகன் ராம்குமார், 19; ஆகியோரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கே.என்.பேட்டை பிரசாந்த், திருப்பாதிரிப்புலியூர் தேவநாதன், நெல்லிக்குப்பம் கணபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
16-ஆக-202002:30:02 IST Report Abuse
Mani . V இவ்வளவு கொரோனா பிரச்சினையிலும் நம்ம டாக்டர் குட்கா வியாபாரத்தை திறம்பட செய்து வருவது மகிழ்ச்சியே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X